திங்கள், 26 ஜனவரி, 2015

மனிதன் மிருகம் தான்...!


சலாம் போட்டு சலாம் போட்டு
குனிந்தே போகிறான் தமிழன்
யாரென்ற எண்ணம் தொட்டு
உலவ மறக்கிறான்
குல்லா போட்டு குல்லா போட்டு
குனிந்தே போகிறான் காவலன்
யாரென்ற எண்ணம் தொட்டு
உணர மறக்கிறான்
அள்ளி போட்டு அள்ளி போட்டு
அளவை குறைக்கிறான் ஊழியன்
தானென்ற எண்ணம் தொட்டு
உழைக்க மறக்கிறான்
தள்ளி போட்டு தள்ளி போட்டு
தடை விதிக்கிறான் சட்டம்
பொதுவென்ற எண்ணம் எட்ட
ஏனோ மறுக்கிறான்
துள்ளி ஓடும் துள்ளி ஓடும்
ஆட்டு குட்டியே உன் மனதின்
கள்ளமிலா உள்ளம் இல்லா
மனிதன் மிருகம் தான்

குடியான தினம் ...!!



கொடி வணக்கம் கொடி வணக்கம்

கோடி கோடி மக்கள் கூடி
தனையிழந்து தேசம் காக்க...!

நேசம் கொண்டு மாண்டு மாய்ந்த

சினம் கொண்டு சீறிப்பாய்ந்த
சிங்கங்கள் எத்துனையாயிரம்...!!

முதல் வணக்கம்...! எந்தன் முழுவணக்கம்...!


ரத்தசரித்திர யுத்த பூமியாய்...!
நித்தம் காட்சி தரும் ருத்ரதாண்டவம்...!
தேசம் சுமந்து தேசம் சுமந்து
நேசம் வளர்த்து பாசம் செழித்து
பகலெல்லாம் இருளாகி பாடுபட்டு
பெற்ற சுதந்திரம் குடியான தினம் ...!!

சுற்றம் மட்டும் சூழ வேண்டும்

சுற்றியுள்ளோன் மாள வேண்டும் 
யுத்தம் செய்ய எத்தனிக்கும்
கள்ளத்தனம் எட்டி பார்க்கும்
இன்றையர்க்கும் குடியான தினம்...!!

ஒருநாள் வேடிக்கை,- இதுவே

அவர்களின் வாடிக்கை..!!


யுத்தங்கள் ஆயிரம் சப்த்தம்
கேளா செவியடைத்து செந்நீர் 
பருகும் கூட்டம் மாளுமன்று 
திருநாளாய் வருமென்று
திகைப்போடு எதிர்நோக்கி...?

திருந்தபோகும் திருத்தப்பட்ட நாள் 
இன்றைய தினமாக மாறாதோ...?!

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல் ...!


பொங்கலோ பொங்கல்
மகிழ்வு பொங்கட்டும்
மக்கள் மத்தியில்
பொங்கலோ பொங்கல்
ஒற்றுமை ஓங்கட்டும்
பொங்கலோ பொங்கல்
வஞ்சனை வீழட்டும்
பொங்கலோ பொங்கல்
உழவர்கள் வெல்லட்டும்
பொங்கலோ பொங்கல்
விவசாயம் விழியாகட்டும்
பொங்கலோ பொங்கல்
விளைச்சலே உயிராகட்டும்
பொங்கலோ பொங்கல்
வினைத்தது நாம்தானே
பொங்கலோ பொங்கல்
விடையதும் நம்(பிக்)கையில்
பொங்கலோ பொங்கல்
விடிவுகள் பிறப்புவிப்போம்
பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்
பொங்கல் நல் வாழ்த்துகள் ...

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பச்சை சேலை கட்டி வா நீ ...!


பச்சை சேலை கட்டி வா,நீ 
வயகாட்டு சோலையம்மா 
பக்கம் வந்து சொக்கி நிற்க 
ஆகாத தலைமுறை நான் 

எட்டு கட்டி மெட்டு கட்டி 
எகத்தாளம் விட்டு வெட்டி 
காக்கூழும் அரைக்கஞ்சும் 
மல்லாட்டை துவையலுந்தா 

சொல்லச் சொல்ல நா அருந்த 
தேடிச் செல்ல பாதை இல்லா 
பரிதவிக்கும் மனசு ஆறுதல் 
யார் சொல்ல யார் வெல்ல 

பசுவுக்கும் கன்று நான் பணம் 
படைத்த எண்ணம் பளிங்கு நாட 
திண்ணம் பழக்கம் வந்த திசையை 
பழிக்கும் எந்தன் குணமே குறை 

சொல்லி மாளாது சோகம் தீராது 
சோற்றில் பிடித்தவழ கனவாகுமா 
இன்று பொழுதும் ஒருபிடிச் சோறும் 
ஏலத்தில் எடுத்த வாழையிலை 

எனக்கென்ன உனக்கென்ன 
கெட்டா தடுப்பாயா கேட்டா 
கொடுப்பாயா எல்லாம் விட்ட 
வழி வயலுந்தன் சோலையம்மா 

பச்சரிசி பொங்கலும் பசும்பாலும் 
பொங்கணும் பன்னீர் கரும்பினிக்க 
வாழ்ந்தோரை வணங்கி நிற்கும் 
வழி தவறிய தலைமுறை நான் 

திங்கள், 5 ஜனவரி, 2015

இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா...!


இனியேனும் உன்னை விடுவேனா  கண்ணா
                காத்திருந்த கரு,வரையில் காலத்தை சாய்த்து
காட்சிதனில் ஆட்சிசெயும் சாட்சி கொண்டே
               கரம்பிடித்தேன் உன்னை கடவாதே நில்லு
நேற்றுவரை நிழலுடுத்தி நீந்திவர செய்தாய்
               காற்றுவந்து காதருகே காதலென சொல்லும்
சேற்றினிலே கோலமிட்ட செய்கையுன் வேலை
              ஆற்றுவ தெண்ணி அமிழ்வதேன் செல்லாய்

கருத்துயிரே காலக் கணையே பொருத்திரு
               கயவனாகி காப்பவன் காயமெனை வாட்ட
மருத்து வனேமாயம் செய்மாயும் மெய்மாற
               திருத்துவ போலெனை தீண்டாது செல்வாயோ
மூச்செழுத்து மொத்தம் தரஏற்க நிலவாய்
               யாருன்னை அழைத்தா ரெனிந்த விரைவோ
கொடுத்தவை போதாதோ மனிதம் செழிக்க
               வாய்க்குவாய் உன்னையே குற்றம் சாட்ட

திருந்துவார் யாரோ அறிந்துவர செய்யேன்
              அருந்துவார் தன்னை அகற்றுவ பொய்யில்
இருந்துபார் எண்ணம் தகர்த்துவ மெய்யை
              இடையேறுஞ் சக்தி பெற்றாலே பாக்யம்
இனுமேனோ என்னை தவிக்கவெ விட்டு
              இனங்காணும் முன்னே தரித்ததை விட்டு
இடங்காண அர்த்தம் அலங்கரிக்க விட்டு
              இனியேனும் உன்னை விடுவேனா கண்ணா,,,,,,


சனி, 3 ஜனவரி, 2015

இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள்...!


கதிரவன் ஆட்சியே காலமாய் சோலை 
உதிர்க்கும் மலரெழுதும் சாட்சி கனவில் 
சதிராடும் கானல் களவுதான் போலும் 
எதிராடும் நாணல் நகை 

உறங்காத வாழ்க்கை உலவுதே தேசம் 
திறவாத கண்கள் கலவுதே நேசம் 
இறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள் 
புறங்காண ஏக்கம் மழை

நிலவென தொட்டு நிலமதில் விட்டு 
உலகென சுட்டி உலவவே மொத்தம் 
சலனமும் சுத்தம் சடுகுடு சித்தம் 
கலக்கமற்ற காத்தல் சுகம் 

காவியம் ஏதடா காதலை கேளடா 
தாவிய பேதமும் தாக்கிய கோணலே 
காவியும் சேதமே சாதகம் சேர்க்குமா 
தேவியின் போதனை சொல்

சூட்சுமம் உன்னையே சூழ்ந்தது உண்மையே
சூழ்நிலை தன்னையே சார்ந்தது உண்மையே
சூழ்ச்சிகள் தன்னகம் சேர்த்தது உண்மையே
சூத்திரம் காரணம்தான் சூடும்  

வியாழன், 1 ஜனவரி, 2015

கேள்விக்குள் சாகிறேன் ....!


இனிக்கும் இரவு கடந்துவா நெருடலாய்
வாய்க்கும் அரிதனை இன்னார்க்கு இன்னதென
இட்டுவைத்தும் எட்டியே பார்க்க கிட்டாதென
கட்டிவைத்த கோலம் காண
சட்டி வைத்து சமைக்காத சங்கடந்தான்
ஆளுதோ ஏர்கலப்பை தானிழந்து கொட்டும்
கேள்விக்குள் சாகிறேன் சாத்தியமே சாகட்டும்
கூட்டமெனும் தோல்வியில் நான்
புன்னகை பூக்காத புதுஜென்மம் யாமே
புரிந்தாலும் தேக்கும் புகழாள வீழ்த்தும்
பசித்தாலும் ஏசும் புசித்தாலும் பேசும்
பலகால மில்லாத மிருகம்
வேலிக்குள் போலிகள் தாளிக்கும் வார்த்தைகள்
சூளைக்குள் வேகுதே சங்கல்பம் கோர்வையாய்
மேல்மட்ட கோணம்தான் கோளத்தின் பாதையோ
சீர்கெட்டு போனதும் நான்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி