திங்கள், 30 மே, 2011

நித்திரை சூழ்வனம்.......


நித்திரை சூழ்வன மத்தியி லாள

நர்த்தனமாடி வருவோனின் நாடியுனர்
நாழிகை தேடக் கிடைக்கா மாடனுயிர்
சடையவிழ் முடி சூடும்

தடை கவிழ்ப் படைச் சூழ
மடியுடை கரணம் மலமெரி கோல்
கலனரை நோக்க நிகழ்தன ரணமேவும்
காலனுடை மேவுதுமே

சொப்பனங் களைய நிகழ்தனும் கடக்க

கரிதிரு கார்மேவி களித்திடு பாருலகை

மகிழ்த்திடு நில்லா நிலைதனையே நின்

புகழ் காற்றத்து கிடக்கேன்

சனி, 21 மே, 2011

வாங்க விருந்துக்கு .....


படைத்தவன் அழைத்தான் பயணப்பட்டேன்
அவன் என் நாவினிலே பொய்யுரைத்து
விடுப்பளித்தான் விடைகொடுத்தான்
எந்தன் விடியளுக்கோ நானறியேன்.....

தாய் மண்மிதித்தேன் இன்ப ஆனந்தத்தில்
கரம் தொழுதேன் நம்மை படைத்தவனை
காட்சி தந்தான் எந்தன் இதயத்திலே
அகமகிழ்ந்தேன் இன்ப வெள்ளத்திலே.....

மெய்யுரைத்தான் எந்தன் நா உரைத்த
பொய் மெய்யென்று உந்தன் வரவை
எண்ணி நோன்பிருக்காள் சென்று
கரம்பிடிப்பாய் என ஆணையிட்டான்.....

புரியா புதிராக்கி புரியவைத்தான்
என்னவளை அறியவைத்தான்
எளிதாய் எங்கள் மணம்முடித்தான்
விரைவில் விடை கொடுத்தான்.........

கலியுகம் : அன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்களுடன் உங்கள் தினேஷ்குமார்......
நேர்லதான் விருந்து வைக்கமுடியல அதான் கல்யாண சாப்பாட்ட இங்கயே கொண்டுவந்துட்டேன் கோபிக்காதிங்க நண்பர்களே......

ஞாயிறு, 8 மே, 2011

தாயும் சேயும் கருவறையில் ...!


அகத்தே நீ உதைக்க
புறத்தே
காணாத பேரின்பம் உன்னை சுமக்கும்
ஒவ்வொரு துளியும் எனை வென்று
உன்னை மீட்பேன் என்கண்மணியே

இவைதான் உலகமென்று புறம் காண
மறுக்குதம்மா உள்ளம் அகத்தே-உன்
அரவணைப்பில் நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே

எனை மீட்கும் வேள்விதனில் வேதனை
பல அனுபவிப்பாயே என் தாயே
உன் வேதனையின் தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்

சோதனையும் வேதனையும் உன் முகம்காண
காற்றாக பறந்திடுமே கண்மணியே -நீ
ஆணாக பிறப்பாயோ பெண்ணாக பிறப்பாயோ
ஏக்கம் எங்கும் நிறைந்திருக்க

தூக்கமில்லா உன் நினைப்பில் காத்திருப்பேன்
பெண்மையிலே வளர்ந்தேனே உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா மாற்றமிலா உண்மையிது

எனைக்காக்கும் இன்னுயிரே உனைக்காப்பேன்
என்றுமிங்கு உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............

கலியுகம் : அன்புக்குரிய அனைவருக்கும் அன்னையர் தின வணக்கங்களுடன் இனிய மீள் வரிகளுடன் உங்கள் தினேஷ்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி