திங்கள், 9 ஏப்ரல், 2012

உதிரும் சருகெனும் மாயவலை...!என்னை யெவ்விடத்து சுற்றவிட்டு
            எங்கங்கே தகிக்கவிட்டு தேடுகிறாய்
ஏதேதோ பிதற்றங்க சந்தருகும்
           ஏலனத்தால் மாண்ட தெருவிதி
சற்றுமெதிர் நோக்கா சந்தித்த
            சாரம் சிந்திக்க நேரமற்று மேலேற
சிக்கிய பிடிதனிற் பயணம்
            சிகைக்கோதும் விரலதுமறியா

சிதையுமது சதையுமென சாரல்
             சாதகமாறிய சூதன விரிப்பில்
பாதகனாண்டவை பகுதியும்
             மிகையல்லா தகுதியும் தானே
தரைப் புரண்டோட தொலைவில்
             உதிரும் சருகெனும் மாயவலை
வீசியதாரோ வினைத்தவன்
             சூடுமிழை தொடுத்தவன் யாரோ


11 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

வணக்கம் நண்பரே

அதானே...... யாரு?யாரு?

Madhavan Srinivasagopalan சொன்னது…

அட. நீங்களும் வெண்பா எழுதுவீங்களா..!!

arasan சொன்னது…

கவிதையின் நடை நெஞ்சுக்குள் இனிக்கிறது வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

முந்தைய கவிதையைவிட விளங்கியது இந்தக்கவிதை தினேஸ் !

சசிகலா சொன்னது…

மாயவலைக்குள் சிக்க வைத்து விட்டீர்கள் . அருமை .

Unknown சொன்னது…

\கவிதைக்கான படத்தேர்வு மிக அருமை. தலைப்பும் ஈர்க்கிறது.

சத்ரியன் சொன்னது…

அதானே தினேஷ்,

யாராகயிருக்கும்?

ஸாதிகா சொன்னது…

கவிதை மிக அருமை.அருமையான வார்த்தை சொல்லாடல்.

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…


உங்களின் இந்தப்பதிவு திரு. சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்களால், இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_04.html) சென்று பார்க்கவும். நன்றி !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி