புதன், 4 ஏப்ரல், 2012

துளியும் துகளும்


கண்ணே கருணைகள் புதைபட்டு கலங்கிட
காரியம் முடிசூட முன்னவனும் பின்னவனும்
கிழக்கும் மேற்க்குமாக எல்லைகள் அற்று
கீரிய சடலமாய் திணறுகிறேன்


துளியும் துகளும் சுடரால் அகல
வலியும் வனப்பும் பாகம் பகைபட
சுவையும் சுனைநீர் அவையறியா
கண்டோர் காணும் உலகு ...குணக்குட்டி யெதையொட்டி வனவட்டக்
குரலோனே நிலைத்தொட்டு நிகரென்ன
கூவி குறையடுக்கி நிறைக் காணக்
கூடலில் ஆழும் நதியே.....

8 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அழகிய கவிதை நண்பா

பாரத்... பாரதி... சொன்னது…

// முன்னவனும் பின்னவனும்//

முன்னவன், பின்னவன் என கவிஞர் தினேஷ்குமார் யாரைக்குறிப்பிடுகிறார் என்பதை அறிய இயலாது கலங்கி நிற்கிறேன்..

பாரத்... பாரதி... சொன்னது…

கவிதையாக்கத்திற்கு பாராட்டுகள் சகோ!

மனசாட்சி™ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மனசாட்சி™ சொன்னது…

எலேய், மக்கா அந்த டிஸ்னரியை பார்செல் பண்ணு..

தமிழ்மகன் சொன்னது…

இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Vist Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

மகேந்திரன் சொன்னது…

//துளியும் துகளும் சுடரால் அகல
வலியும் வனப்பும் பாகம் பகைபட//

அழகிய சொல்லாடல் நண்பரே...

கீதமஞ்சரி சொன்னது…

துளியும் துகளும் அற்ற (நீரும் மணலுமற்ற) வெறுங்கூடாய் விதிவழி நடக்கும் நதியெனப்படும் சடலத்தின் புலம்பலாய் உணர்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்.

கருக்கோத்த வார்த்தைக் கோவைகளில் வசீகரிக்கிறீர்கள். பாராட்டுகள் தினேஷ்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி