சனி, 10 டிசம்பர், 2011

"தமிழுக்கு கவி"


கனியாத உள்ளமெல்லாம்
கனிய வைக்க கவிபடைத்தாய்
பெண்ணடிமை விலங்கொடித்து
அச்சமிலா விடியல் கண்டாய்

சாதி ஒழிய சாட்டைதனை
கரம்பிடித்து சமத்துவம் புகட்டினாயோ
அச்சமில்லை என்றுரைத்து
காட்டாற்று கவி சமைத்து

வெள்ளையனை வெளியேற்ற
வேள்விபல கண்டவரே
தமிழ் பாலூட்டி தரணியெங்கும்
தமிழ் வளர்த்த மீசையாரே

நின் கவிபாடும் உலகெங்கும்
தமிழ் உரிமை போராளியே
உம் பாதங்களை பின்பற்றி
பயணிக்கும் உள்ளமிங்கு

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த தினமான இன்று தமிழ் கடவுளாக அவரை வணங்குவோம்

11 கருத்துகள்:

NAAI-NAKKS சொன்னது…

வணங்குவோம் .....
வணங்குவோம் .....
வணங்குவோம் .....

மோகன்ஜி சொன்னது…

மாக்கவிஞனின் நினைவு போற்றும் தம்பிக்கு கவிதை வாழ்த்து!

விஜயன் சொன்னது…

தமிழ்கடவுள் பாரதி பணிவோம் அவர் பாதங்களை...
visit my post:
என்றும் அழியா பாரதி:
//http://vijayandurai.blogspot.com/2011/12/blog-post_10.html//

ரிஷபன் சொன்னது…

பாரதியின் பேரைச் சொன்னால் உள்ளமெல்லாம் சிலிர்க்குது..
இந்தக் கவிதையும் அழகாய்.

thendralsaravanan சொன்னது…

கவி புயலுக்கு ஒருஅருமையான கவிதை படைத்துவிட்டீர்கள்!

மகேந்திரன் சொன்னது…

மகா கவிக்கு அற்புதமான
கவியுரைத்தீர்கள் நண்பரே...

ViswanathV சொன்னது…

அழகானக் கவிதை,
அற்புதம்.
வாழ்க பாரதீயம்.

RAMVI சொன்னது…

மஹாகவிக்கு ஒரு சிறப்பான கவிதை தமிழ் கடவுள் என மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!

நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

கீதா சொன்னது…

பாரதியின் கம்பீரத்துடன் ஒரு அற்புதக் கவிதை. பாரதியின் படமும் வித்தியாசக் கோணத்தில். அருமை. பாராட்டுகள். பாரதிக்கு என் வணக்கங்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி