புதன், 14 டிசம்பர், 2011

இணையும் கரங்ககள்

அன்பினில் அகப்பட்டு அன்னவர் காக்க
அருகினில் கிட்டா கனியாய் யெட்டி
தூர நின்றதுவே கண்டங்கள் தாண்டி
வெற்றுடலாய் இயந்திரமாய்

இன்னல்கள் தீர்க்க தினிக்கப்பட்ட
வாழ்வியல் சூடும் மணக்கப்பட்ட
மாலை கனக்கும் சுமையெல்லாம் 
மறக்க வலை நாடி

விதி மாற்றி வீதி சமைக்க
துணையாய் இடர் நீக்கும் தூண்களாய்
சுடர்விட்டெரியும் இணையத்தி
இணைக்கும் கரங்களின்

முதலகவை நிரைவுற இரண்டின் 
துவக்கத்தே அன்புள்ளங்களின் 
ஆதரவை தேடி வலைபாயும் 
குருவிகளாய் கண் முன்னே

தாய்மொழி செந்தமிழின் தனித்திறம் 
மேலோங்க அன்பர்களின் படைப்புகளை 
நலமுடன் செதுக்குங்கள் வளம்வருவோம் 
முடிசூடா மன்னர்களாய் 


8 கருத்துகள்:

NAAI-NAKKS சொன்னது…

:))))))))))))))

கோவி சொன்னது…

நல்லா இருக்கு நண்பரே..

RAMVI சொன்னது…

விருது ஏற்பாட்டிற்கு, வாழ்த்துக்கவிதை..நன்றாக இருக்கு.

Kalidoss Murugaiya சொன்னது…

கரங்கள் இணைந்து உறவுப் பாலத்தில் உலா வரலாம்.. கவிதை அருமை..

மகேந்திரன் சொன்னது…

நல்ல முயற்சிக்கு
வாழ்த்துக்கவிதை..
அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான வரிகள்...
அருமையான பதிவு.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள வாழ்த்துக்கள்!

ருத்ரன் சொன்னது…

நல்லா இருக்குடா தம்பி...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி