சனி, 21 ஏப்ரல், 2012

என்னவள் கரம் பிடித்த நாளின்று

விரைந்து தான் செல்கின்றது பரந்து
விரிந்த உலகில் நிமிடங்களை வெறுமனே
விட்டுவிட்டால் கிட்டுவதில்லை திரும்ப
ஓராண்டுகள் முடிவின் துவக்கம் 

வசந்தம் வீச வாலிபங்கள் வயதணியும் 
வாடாமலரன்றி நீடும் நிகழ்மாற்றம்
சாடுவன அனைத்தும் நம்மில் சாரமாய்
ஏற்றம் காணுவது அறிது

பாடும் பாவையன்றா என்னை அவணியில் 
மணமாலையுடன் தேடி நின்றாய் சூடும் 
நேரமறிந்து ஆட்டுவித்தான் காட்டிவைக்க
கரம் பிடித்த நாளின்று 

காரணிகள் நமையாண்டும் மாறத
மனம் கொண்டோம் மண்ணவளும்
மகிழக் கண்டேன் என் மன்னவளே
உள்ளில் இல்லம் கொண்டவளே......

எனையாளும் பூவிழியே பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...

12 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

என் மனப்பூர்வமான
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
தம்பதி சகிதமாய் நிறைவான செல்வங்களுடன்
இன்புற்று இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்..

மனசாட்சி™ சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியமான நாள்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வாழ்த்துகள் மச்சி.. :)

Chitra சொன்னது…

HAPPY ANNIVERSARY, DINESH AND SAKTHI!

Kayathri சொன்னது…

அருமை சகோ..உள்ளத்தில் இல்லம் கொண்ட இல்லாளுடன் என்றும் மனமகிழ்வுடன் இருக்க இறையருளட்டும்.....:):):)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துகள் மச்சி...........!

NAAI-NAKKS சொன்னது…

என் இதயம் கனிந்த....
வாழ்த்துக்கள்....

பங்கு ஊருக்கு வந்துட்டு என்னை மறந்திடாதீரும்....

FOOD NELLAI சொன்னது…

மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள்.

Kalidoss Murugaiya சொன்னது…

பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ,எங்கள்அனைவரதும் மனம் கனிந்த வாழ்த்துக்கள் .இறையருளும் ,எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம் .

சத்ரியன் சொன்னது…

தம்பி தினேஷ் தம்பதியருக்கு எங்கள் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.

(பின் குறிப்பு:- தம்பி என அழைக்கும்படி அடிக்கடி சண்டை போடுகிறார். இந்த நன்னாளிலாவது அவர் மனம் கோணாமல் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் அண்ணனாகிய அவரை தம்பி என்று சொல்லி மகிழ்வூட்டுகிறேன்.)

G.M Balasubramaniam சொன்னது…

"எனையாளும் பூவிழியே பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.”எனும் உங்கள் வாழ்த்துடன் இருவருக்குமென் வாழ்த்துக்கள். வாழி நீர் பல்லாண்டு பல நலன்கள் பெற்று.

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி