வெள்ளி, 13 ஜனவரி, 2012

பச்சை சேலை கட்டும் தாயே...!


அன்னமாய் வழிநடத்தி வண்ணமாய்
சிலை வடித்து எண்ணமாய் நிழலுடுத்தி
பச்சை சேலை கட்டும் தாயே
உயிரிருக்கும் உடல் செழிக்க

வெட்டவெளி தவமிருக்கும் அம்மா
நீ தத்தெடுத்த பிள்ளை எல்லாம்
கட்டுச்சுமை தாக்கமல்லா உச்சி
சுட உழைப்புமிலா

பிழையுணரா பழி சுமக்கும் சுவை
அறியா சூடுமிழை நிறம் மினுக்க
காடும் கடத்தி கட்டிட உச்சத்திலே
பொங்குதம்மா எங்கும்

அரிதாரமின்றி தானே அவதாரமாய்
அவையுணர்த்தி நாட்காட்டிய நிலை
மாற நினை வேண்டி தவமிருக்கும்
ஏர்பிடிக் கரங்களின் கண்ணீராய்

15 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லாயிருக்குங்க.

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள நல்லா இருக்குய்யா!..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..தலைப்பொங்கல் தானே!

Kalidoss Murugaiya சொன்னது…

அருமையாய் இருக்குங்க. உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ..

RAMVI சொன்னது…

கவிதை நன்றாக இருக்கு.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மதுமதி சொன்னது…

பொங்கலுக்கு முன்னதாக உழவனை ஞாபகப் படுத்தும் விவசாய கவிதை அருமை..வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி..தங்கள் தளத்தில் இணைந்துகொண்டேன்..தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
வாழ்க்கைத் துணை நலம்

FOOD NELLAI சொன்னது…

உழைத்தவனை நினைத்து வாழ்த்து. ’தல’ பொங்கல் வாழ்த்து.

NAAI-NAKKS சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கவிதை நல்லா வந்திருக்கு, தினேஷ்! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//நீ தத்தெடுத்த பிள்ளை எல்லாம்
கட்டுச்சுமை தாக்கமல்லா உச்சி
சுட உழைப்புமிலா///

...விளைச்சல் இன்றி வேதனைப்படும் மக்களின் நிலையை அழகாய் எடுத்து சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள். :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா இருக்கு சார்! பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருக்கு...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

விமலன் சொன்னது…

பச்சை சேலையை நிலமகள் நிரந்தரமாக கட்ட அரசுகள் நிறைய உதவவேண்டும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டுடுச்சு, இனி ரெகுலர் பண்ணிக்கறேன் தினேஷ்:)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான கவிதை, வாழ்த்துக்கள் தம்பி...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டுடுச்சு, இனி ரெகுலர் பண்ணிக்கறேன் தினேஷ்:)//

எங்கேடா ராஸ்கல் டச் பண்ணப்போறே பிச்சிபுடுவேன்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி