செவ்வாய், 23 நவம்பர், 2010

தொடர்பதிவின் தொடர்ச்சி பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.


தொடர் பதிவின் தொடர்ச்சி.........

முந்தைய பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

6, படம் : சிந்து பைரவி

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

தவறை தட்டிகேட்பாங்க பாருங்க

"பழகின பாஷையில படிப்பது பாவமில்ல"
"சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப்படி"

5, படம் வாத்தியார் வீட்டு பிள்ளை
படத்துல நம்ம தலைவர் சத்தியராஜ் பாடுவாருங்கோ

அண்ணன விட்டு ஒரு கல்யாணமா
அன்பு கண்கள கட்டி ஒரு ஊர்கோலமா
சிந்தையில் வைத்த அண்ணனும் தான்
பந்தலில் நிற்க்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா

சத்தியராஜ் படத்துல தங்கை பாசத்தில் கண் கலங்கி பாடுவார்
பார்க்கும்போது நம்ம கண்ணும் கலங்கிரும். இதுக்கு மேல முடியல சகோ கொஞ்சம் கண்ணு கலங்குது எனக்கு

4, படம் : திருவிளையாடல்

"பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்"

தென்றலை வர்ணித்து பாடியிருப்பார் தென்றலோடு பயனிக்கற மாதிரி ஒரு அனுபவம் உண்டாகும் கேட்டுப்பாருங்க

3, படம் : கற்பகம்

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா

என்ன அருமையான தாலாட்டு தூங்காம கேளுங்க அவ்வளவு அருமையா இனிக்கும்

2, படம் : மரகதம்
பாடியவர் : சந்திரபாபு , ஜமுனா ராணி

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே..........

என்னை நடனமாட களமிறக்கிய சந்திரபாபு பாடல்கள் என்னை இன்னும் சில பழமைவாதிகள் சந்திரபாபு என்றே அழைப்பர்

1,படம் : பாக்கியலட்சுமி

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார்
தோழி (மாலை)

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் எதிர் காலம் (மாலை)

மறக்க முடியாத பாடல் என்ன இன்னும் மயக்கம் தெளியவில்லையா சரி அடுத்து யார் யாரெல்லாம் சிக்கராங்கன்னு பார்ப்போம வாங்க வினோ , தமிழ்காதலன் அடுத்ததா பன்னிகுட்டி ராமசாமி (அதாங்க நம்ம கவுண்டரு) சி.பி.செந்தில்குமார் சாருக்கு படம் பார்த்து விமர்சனம் செய்ய நேரம் இல்லாத காரணத்தால் அவரும் தொடரவேண்டும் என்ற என் ஆழ்ந்த கருத்தினை உங்கள் முன் வைக்கிறேன் ஹலோ எங்க போறீங்க இன்னும் முடியல அடுத்ததா களம் இறங்குபவர்கள் நம்ம நாகராஜசோழன் MA (அதாங்க கோல்ட் பிரேம்) அடுத்து கருத்து கந்த சாமி நம்ம பிலாசபி பிரபாகரன் என்ன மக்கா சந்தோஷம் தானே

பி.கு. யாரவது தப்பிக்கனும்னு நினைக்க கூடாது இது அன்பு கட்டளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கவிதை மூலம் வதம் செய்ய படுவர்

34 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

அருமை....

பாரத்... பாரதி... சொன்னது…

பாடறியேன் படிப்பறியேன் பாடல் நல்ல தேர்வு.
//
"பழகின பாஷையில படிப்பது பாவமில்ல"
"சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப்படி"//

//அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா//
அருமை...

//இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் //

LK சொன்னது…

அருமை நல்ல தேர்வுகள்

பாரத்... பாரதி... சொன்னது…

//கவிதை மூலம் வதம் //
ஒத்துக்கிட்டா சரிதான்...

பாரத்... பாரதி... சொன்னது…

//வினோ , தமிழ்க்காதலன் ,பன்னிகுட்டி ராமசாமி, ,சி.பி.செந்தில்குமார் இ நாகராஜசோழன் MA ,பிலாசபி பிரபாகரன்//

பெரிய கூட்டத்தையே சிக்க வச்சுட்டீங்க.. எப்படியோ தேர இழுத்து , தெருவுல
விடாம இருந்தா சரிதான்...

பாரத்... பாரதி... சொன்னது…

//வினோ , தமிழ்க்காதலன் ,பன்னிகுட்டி ராமசாமி, ,சி.பி.செந்தில்குமார் இ நாகராஜசோழன் MA ,பிலாசபி பிரபாகரன்//


மேற்கண்ட அன்பர்கள் கவனத்திற்கு இவ்விடம் பெண் மனசு- பாடல்கள் அடங்கிய குறிப்பு (பிட்) வழங்கப்படும்.

டிஸ்கி: காப்பி அடிக்க மறுக்கும் மனசாட்சியுள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.(நாங்கெல்லாம் பின்னூட்டத்திலேயே டிஸ்கி எழுதுவோமில்ல...)

பாரத்... பாரதி... சொன்னது…

தினேஷ்.... நீரோடை மலிக்கா அவர்களும் இது பற்றி பதிவு எழுதியுள்ளார். பார்த்தீர்களா?

karthikkumar சொன்னது…

கலக்குங்க பங்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சூப்பர் பாட்டுத்தான்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அத்தை மடி மெத்தையடி

dineshkumar சொன்னது…

//வினோ , தமிழ்க்காதலன் ,பன்னிகுட்டி ராமசாமி, ,சி.பி.செந்தில்குமார் இ நாகராஜசோழன் MA ,பிலாசபி பிரபாகரன்//

பெரிய கூட்டத்தையே சிக்க வச்சுட்டீங்க.. எப்படியோ தேர இழுத்து , தெருவுல
விடாம இருந்தா சரிதான்...

என் நண்பர்கள் எல்லாம் தன்மான சிங்கங்கள் கண்டிப்பா தொடருவாங்க நம்பிக்கை இருக்கு

வினோ சொன்னது…

நல்ல தேர்வுகள் தினேஷ்...

Chitra சொன்னது…

Looks like good songs. :-)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

முதல் பாடலும் , கடைசி பாடலும் என்னை மிகவும் கவர்ந்தவை ...

மோகன்ஜி சொன்னது…

நல்ல ரசனை தம்பி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாத்தியார் வீட்டுப்பிள்ளை பாடல் எனக்கு ரொம்ப புடிக்கும், உண்மையிலேயே உருக்கமான பாடல்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னய்யா என்ன வேற கோர்த்து விட்டிருக்க? சரி எனக்கு ஓக்கே பா...1

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னய்யா என்ன வேற கோர்த்து விட்டிருக்க? சரி எனக்கு ஓக்கே பா...1

கவுண்டரே நா உங்கள மாட்டிவிடல உங்களுக்குல்லையும் இருக்கு ஒன்னு வெளியே கொண்டாங்க

சுசி சொன்னது…

இங்கேயும் நல்ல பாடல்கள்.

கவிதை தண்டனையா.. எழுதிடுவாங்க கண்டிப்பா :))

நாகராஜசோழன் MA சொன்னது…

ஏம்ப்பா தேர்தல் வேலை நெறைய கிடக்கு. அதை செய்ய வேண்டாமா? சரி நம்ம தினேஷ் ஆசைப்பட்டு சொல்லிட்டாரு. நான் ரெடி..

வெறும்பய சொன்னது…

நல்ல தேர்வுகள்..

இப்படி சடனா எழுதினா எப்படி நாங்களும் எழுத வேண்டாமா... கொஞ்சம் டைம் குடுங்க பாஸ்..

சகாதேவன் சொன்னது…

நல்ல பாடல்கள். நானும் எழுதவா? இப்போதே யோசிக்கிறேன். இரண்டு நாள் டைம் குடுங்க.
சகாதேவன்

சகாதேவன் சொன்னது…

நல்ல பாடல்கள். நானும் எழுதவா? இப்போதே யோசிக்கிறேன். இரண்டு நாள் டைம் குடுங்க.

சகாதேவன்

அன்புடன் மலிக்கா சொன்னது…

பாடறியேன் படிப்பறியேன் //

எனகு பிடித்த பாடல். அதில்வரும் சிலவரிகளும் என்னோடு சம்மந்தப்படுதப்படதுபோல் இருக்கும்.

//பள்ளிக்கூடம்நானறியேன்
ஏடறியேன் எழுதறியேன் எழுத்துவக நானறியேன்//

நல்ல தேர்வுகள் சகோ..

logu.. சொன்னது…

annana vittu ...


sema song..

dineshkumar சொன்னது…

சகாதேவன் said...
நல்ல பாடல்கள். நானும் எழுதவா? இப்போதே யோசிக்கிறேன். இரண்டு நாள் டைம் குடுங்க.

கண்டிப்பா எழுதுங்க சார் வரவேற்கிறேன் தங்களை வருக வருக........

மனோ சாமிநாதன் சொன்னது…

எல்லாமே நல்ல தேர்வுகள்!

எஸ்.கே சொன்னது…

சூப்பர் சார்!

Riyas சொன்னது…

நல்ல பாடல் தெரிவுகள்... உங்கள் தளம் இப்போதுதான் பார்க்கிறேன் பின் தொடர்ந்தும் விட்டேன்..

vanathy சொன்னது…

super selections.

ஆமினா சொன்னது…

எல்லா தேர்வுகளும் அருமை சகோ. உங்க ரசனையை தெள்ளத் தெளிவா காட்டுது

//பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்//
என் விருப்ப பாடல்.சுஜாதாவுக்கு தேசியவிருது வாங்கி தந்தது..

//அருமையான தாலாட்டு தூங்காம கேளுங்க//
தாலாட்டே தூங்க வைக்க தானே :)))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி ஒரு வாரம் டைம் குடுங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர் பதிவு எழுதறதால நீங்க பிரபல பதிவர் ஆகிட்டீங்க ,வாழ்த்துக்கள்

philosophy prabhakaran சொன்னது…

அடடே... மன்னிக்கணும் நண்பரே... கவனக்குறைவில் விட்டுவிட்டேன்... நிச்சயம் எழுதுகிறேன்... ஆனால் பிடித்த பத்து பாடல்களை எழுதுவது மிகவும் கடினமான விஷயம் எனவே எனக்கு ஒரு வாரம் வரை நேரம் கொடுங்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி