செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

நீ வருவாய் என...!


ஆழ்ந்த உறக்கம் இரவின் உச்சத்திலே
மெல்ல மெல்லிய கரம் பிடித்து 
என்னை அவளருகே அழைத்து செல்ல
உள்ளில் உணரா தவிப்பு 

மழலையாய் கூடே ஒன்றும் புரியாமல்
பற்றிய கரத்தின் பிடியில் பயணிக்க
சொல்லாமல் உணர்த்தி என்னை விட்டு 
செல்ல பிரமிப்பின் உச்சத்திலே

உனக்காக காத்திருக்கோம் வா வா
எங்கள் கண்ணே உயிரில் கலந்து
உள்ளில் உணர்வாய் என்னில் உணர்த்தி 
உருவளர்க்கும் செல்லமே ......

நீ வருவாய் என விழித்திருக்கும்
இரு விழிகளின் தாண்டவ தகிப்பு
நீளும் பாதைகளில் இனி மூவராய்
பயணத்தை துவக்க வாராய் ....

எங்கள் செல்வமே நீ வாராய்....!

9 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

//"நீ வருவாய் என...!"//

வந்தாச்சி... அப்புறம்?

Latest Cinema News சொன்னது…

kavithai Super..... We are waiting for the next

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அழகிய கவிதை நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்றைய பதிவில்

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

NAAI-NAKKS சொன்னது…

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))

RAMVI சொன்னது…

குழந்தைக்கு சிறப்பான வரவேற்பு.அருமையான கவிதை.

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் புது வரவுக்கும் உங்களுக்கும் தினேஷ் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

கீதமஞ்சரி சொன்னது…

மழலையின் வரவை மறுபாதிக்கு உணர்த்தியக் கணங்கள் மறுபடியும் நினைவிலாடுகிறது. பரவசம் அனுபவித்த நிமிடங்கள் அல்லவா அவை! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி