திங்கள், 13 பிப்ரவரி, 2012

கிறுக்கனின் கிறுக்கல்
சின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல்
மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர்
செல்லும் இடமெல்லாம் சொல்லும் 
வார்த்தை வெல்லப் பிறந்தேன்


புற்களைத் தொட்டுத்தவழும் அதிகாலைப்
பனித்துளி சொல்லும் சேதிக் கேளேன்
கண்மணி விடியல் நம்மை பிரிக்க
உன்னில் ஈரமாய் உறைவேன்


பாதம் பதியச் சிதறும் மண்துகள்
வின்னவன் உதிர்க்கும் மழைத்தூரலில்
மனம் மயங்கி பின்னிப் பினைந்து 
உள்ளில் ஈர்க்கும் உவமை


உள்ளவன் கண்டதும் கொண்டதும் 
மன்னவன் சூட மலர்மனமேந்தும்
இன்னலின் காரணி இனிமையாய் 
இதழருந்தும் மருந்தே 

7 கருத்துகள்:

NAAI-NAKKS சொன்னது…

அருமை....
பகிர்வுக்கு நன்றி...
கொஞ்சம் புரியூது

Kalidoss Murugaiya சொன்னது…

புற்களைத் தொட்டுத்தவழும் அதிகாலைப்
பனித்துளி சொல்லும் சேதிக் கேளேன்
கண்மணி விடியல் நம்மை பிரிக்க
உன்னில் ஈரமாய் உறைவேன்
super..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை [[ஹி ஹி]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிகுட்டி ஓட்டு போட்டுட்டு ஓடிட்டார் டேய் அண்ணே பன்னி அண்ணே.....

FOOD NELLAI சொன்னது…

அழகிய கவிதை. ரசித்தேன்.

சத்ரியன் சொன்னது…

அழகிய கவிதை தினேஷ்.

மனசாட்சி சொன்னது…

நல்லா இருக்கு

ரசித்து படிக்கணும் போல...இல்ல அப்பத்தான் புரியுதுப்பா

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி