திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாளும் வாழ்வான்..................!

அற்றதும் தொடர்ந்துன்னில் ஆற்றா 
கடமைகள் புதையுண்ட நிலை காண
உற்றதன் துணைக் கொண்டு புதையல்
தேடப் பயணத்தை துவக்கு

புறம் காணா மறைத்து வைக்க
அகக்கோலின் அடியளந்து ஆழ்ந்துழ 
எட்டாப் படியும் கிட்டாக் கனியும்
அருகே அவணியில் காண்

சுடச் சுட சூடும் தணியும்
தனியாத் தாகம் தஞ்சம் புக
எஞ்சும் ஏகாந்த நிலையில் நீரூற்று
அணுகிப் பருகா இன்பம்

இவைதானோ இலைத் தழைக்கூடு 
இன்னோர் பிறவியெடுப்பினும் இயல்
சாடுவன நிவர்த்திசெய் இன்னலாயினும்
நல்லெண்ணம் கொண்டான் .....

நாளும் வாழ்வான்..................!

3 கருத்துகள்:

FOOD NELLAI சொன்னது…

கொஞ்சம் கஷ்டம்தான்!

கீதமஞ்சரி சொன்னது…

அருமையான கருத்துகள். இயலாமையிலும் முயலாமையிலும் முட்டி நின்றுவிடாது ஆழ்மன உத்வேகத்துடன் அனுதினமும் அணுகினால், தேடப்படும் யாவும் நம்மைத் தேடிவரும் நாளும்.

மனம் தொட்டக் கவிதை. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தினேஷ் சார் ! தூள் !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி