வெள்ளி, 22 அக்டோபர், 2010

தவிப்பு

உறங்கா விழி படைத்து
நினை பாலூட்டி உறங்க வைத்து
நின் விழி நோக்கிய
அன்னையன்ரோ

தடை பல தகர்த்து
நினை தரணியில்
தவழ வைத்த தந்தையன்ரோ

தன் மக்கள் கற்ப்பினும்
தான் கற்ற கல்விதனை
நினக்கு புகட்டிய ஆசானன்ரோ

நீ செல்லும் பாதையின்
முற்களை அகற்றிய
நின் பாச சகோதரனல்லோ

தன் மடிதனில் நினை யமர்த்தி
நின் செவிதனில் தோடனிந்த
தாய் மாமனன்ரோ

நினை சுற்றி விளையாடும்
நின் பக்கத்து வீட்டு
தோழிகலன்ரோ

தாய் தந்தை
அமைத்திட நின்
வாழ்வு கசக்குமென்று

நின் விருப்பத்தை
விருதாக்கியவர்கள்
அவர்கலன்ரோ

சிறிதும் சிந்திக்காது
அவர்கள்
சிந்தனையெல்லாம்
உனை நினைத்து

சிறு நெருப்பிற்க் கிறையாகி
சிதரவைத்ததேனோ
அவர்களை.........

10 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

சிறப்பாக உள்ளது!

சாருஸ்ரீராஜ் சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது....

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கவிதை அருமை

Padhu Sankar சொன்னது…

Very nice

நாணல் சொன்னது…

நல்ல சிந்தனை.. எழுத்துப் பிழைகளைக் கவனித்தால் இன்னும் சிறப்பு...

தினேஷ்குமார் சொன்னது…

நாணல் said...
நல்ல சிந்தனை.. எழுத்துப் பிழைகளைக் கவனித்தால் இன்னும் சிறப்பு...



பிழை திருத்திவிட்டேன் தோழி

Unknown சொன்னது…

thalaipai 'elappu' enru koduthalum thakum.ok kavidai super

மோகன்ஜி சொன்னது…

நல்ல கருத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள்..ரசித்தேன்!

புகைப் படத்தில்,உங்கள் தோளில் தொற்றிக் கொண்டிருக்கிறதே ஒரு கவிதை... அதன் பெயர் என்னவோ?!

தினேஷ்குமார் சொன்னது…

மோகன்ஜி said...
நல்ல கருத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள்..ரசித்தேன்!

புகைப் படத்தில்,உங்கள் தோளில் தொற்றிக் கொண்டிருக்கிறதே ஒரு கவிதை... அதன் பெயர் என்னவோ?!

வணக்கம்
வரவேற்று வணங்குகிறேன் என் தோளில் தொற்றிக் கொண்டிருக்கும் கவிதை அண்ணன் மகள் அஞ்சனாதேவி..........

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஹ்ம்ம்... கவிதை நல்லா இருக்குங்க..
கடைசியில பீல் பண்ண வச்சிட்டீங்க... :(

(அஞ்சனா தேவி க்யூட் பேருங்க :-) )

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி