திங்கள், 25 அக்டோபர், 2010

புரியா புலம்பல்

புரியாமல் புலம்புகிறேன்
பூப்போல புவி சிரிக்க 

கரையாமல் கலைகிறேனே
காற்றோடே ஆசைகளை 

நிகழ்கால நினைவலையில் 
நீந்துகின்ற நீரோடை

தடையில்லா கரம் கொடுக்க 
தாழாத வரம் வேண்டி 

மழையன்றோ மனம் வெல்லும் 
மாறாத திடம் வேண்டி 

வரியொன்றை நீ வாசிக்க 
வாழ்வெல்லாம் கவியாவேன்..............

கரம் பிடிக்க 
காத்து நிற்கும்
கானல் நானானேன் ............

13 கருத்துகள்:

வினோ சொன்னது…

/ கரம் பிடிக்க
காத்து நிற்கும்
காணல் நானானேன் ............ /

கூடிய விரைவில் எல்லாம் மாறும்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எல்லாம் மாறும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது நண்பா.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இண்ட்லியில் இணைக்கலியா?

சுசி சொன்னது…

நல்லா இருக்குங்க.

நிலாமகள் சொன்னது…

நல்லா இருக்குங்க... எழுத்துப் பிழைகளைக் கவனிச்சுக்குங்க.

logu.. சொன்னது…

\\கரம் பிடிக்க
காத்து நிற்கும்
காணல் நானானேன் ............\\


Super,,,

நிலாமதி சொன்னது…

கவிதையில் கருத்து அழகாய் சொல்லபட்டு இருக்கு . கானல் ...............ஒரு சில் எழுத்துப் பிழை தவிர்த்தால் மேலும் அழகாகும்.

பெயரில்லா சொன்னது…

கரம் பிடிக்கக் காத்திருக்கும் போது கானல் ஏன் ஆக வேண்டும்.

விமலன் சொன்னது…

கரம் பிடிக்க காத்திருக்கும் போது ஏன் கானல் ஆக வேண்டும்?

மோகன்ஜி சொன்னது…

கரம பிடிக்க காத்திருக்கும் கானல் நானானேன்....

இந்த வரிகள் அழகானவை தினேஷ்.
வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

வரியொன்றை நீ வாசிக்க
வாழ்வெல்லாம் கவியாவேன்..............


.....காதலில் மூழ்கி விட்டவருக்கு தோன்றும் உணர்வு... அசத்தல் வரிகள்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்போ ஓட்டு போட்டுட்டேன்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி