ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நெஞ்சம் வெடிக்கிறது 18+

ராவணனை பழிதீர்த்த
ஏக பத்தினி விரதா
ராமா உன்னை 
கரம்கொண்டு வணங்க 
மறுக்கிறேன் மனதார

சுயநலத்தால் போரிட்டீர்கள்
சூழ்ச்சிகள் பல செய்து
சுடுகாடாய் அன்று
என் தமிழ் மனம் வாழும்
இலங்கை தீவு........

இன்றும் தனியவில்லை 
நீரிருவர் செய்த
சூழ்ச்சியின் 
சூறையாடல் மனம்
குமுறுகிறேன் தமிழ் 
காக்க கடவுள் யாரும்
இல்லையோ நின்
மேல் போர்தொடுக்க

தன்னை எதிர்க்க 
எவரும் இல்லையென்று 
தரணி யால்கிராயோ
தமிழை வதைத்து 
இந்த பிஞ்சு உள்ளங்கள் 
என்ன குற்றம் 
செய்தன உனக்கு
பாரடா பார் 
உடல் தின்று 
பசி தீர்த்தவனல்லவோ
நீ ....... 

ஆஞ்சநேயரே 
பெரும் தவறு 
செய்து விட்டீர் 
சுயநலவாதி
ராமனுக்கு உதவி 
இனியாவது
பிறவிபலனை தேடிக்கொள்
என்மக்களை காத்து 

ஏய் ஆதிக்க அரசாங்கமே 
இனியாவது திருந்துங்கள் 
என் நெஞ்சு வெடிக்கிறது
இந்த பிஞ்சு நெஞ்சங்களின்
சுடுகாடுகளில்....... 
சீர்திருத்த வாதிகள்
சினம் கொண்டு 
எழுந்தால் இப்புவி
தாங்காது புரிந்து 
புறப்படுங்கள்.............. 

தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு அடியேனின் தாழ்பணிந்த வணக்கம். நான் ஸ்ரீராமரையும், ராவணனையும் இங்கே எழுதிள்ளேன் அவர்களை இழுத்ததால் அவர்கள் தொடுத்த போர் இன்றும் முடிவுறவில்லையே என்பது தான் எனது ஆதங்கம் இந்திய அரசாங்கம் இன்றும் எதிரியாக(அகதிகளாக)த்தான் பார்க்கிறது (அதாவது ராமரின் பார்வையில் இலங்கை தமிழர்கள்) இலங்கை தமிழர்களை.சிங்களப் பார்வையில்(ராவணனின் பார்வை) அடிமாடுகளாய் தமிழ் இனம். நடப்பவை எல்லாம் உங்களுக்கே அறியும். இச்சிறு நெஞ்சங்களின் மரணங்கள் நெஞ்சை கதறச் செய்தன ஆத்திரம் கொண்டால் முறையிடவேண்டிய இடமல்லவா இது ராமனும் ராவணனும் ஆதியில் ஏற்படுத்திய தம் இருவரின் சுயநலத்திற்காக சூறையாடிய தமிழ் இனம் இன்றும் மாள்கிறது இலங்கையிலே.............. 

பயிர் விதைத்தவன் பகைக்கொள்ளலாமா 
பரனையில் முளைத்திருந்த 
மூன்று நெற்பயிர்கள்.............

நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை காலம் கடத்தும் காலக்
கடவுளை நம்புபவன் 
கருவில் செய்த குற்றம் தான் என்னவோ 
கருவரையில் சிதைக்கப்பட........... 

குமுறுகிறது நெஞ்சம் ...........

14 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முத வட

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இண்ட்லில இணைக்கலையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

போட்டுத்தாக்குற

dondu(#11168674346665545885) சொன்னது…

//சுயநலத்தால் போரிட்டாய்
சூழ்ச்சிகள் பல செய்து
சுடுகாடாக்கினாய் அன்று
என் தமிழ் மனம் வாழும்
இலங்கை தீவுதனை//
அப்படி என்ன சூழ்ச்சிகள்தான் செய்து விட்டானாம் என் அப்பன் ராமபிரான்?

இன்று போய் நாளை வாராய் என்றானே அதுவா?

வீரன் இந்திரஜித்தின் சடலத்துக்கு தன் மேல்துண்டை போர்த்தி ஒரு நாள் போர் ஓய்வு தந்தானே அதுவா?

இங்கு என்னதான் கூறவருகிறீர்கள்? கொழுப்பெடுத்து போய் மாற்றான் மனைவியை அபகரித்தவனுடன் கைகுலுக்கியிருக்க வேண்டுமா அவன்?

அல்லது ஈழத்தமிழர்கள் ராவணன் செய்த கொடுஞ்செயலை போல ஏதேனும் செய்தார்கள் எனக்கூற வருகிறீர்களா?

டோண்டு ராகவன்

Aathira mullai சொன்னது…

நெஞ்சம் வெடித்து விட்டது.. உண்மையில் கண்ணீருடன்...

தினேஷ்குமார் சொன்னது…

dondu(#11168674346665545885) said...
//சுயநலத்தால் போரிட்டாய்
சூழ்ச்சிகள் பல செய்து
சுடுகாடாக்கினாய் அன்று
என் தமிழ் மனம் வாழும்
இலங்கை தீவுதனை//
அப்படி என்ன சூழ்ச்சிகள்தான் செய்து விட்டானாம் என் அப்பன் ராமபிரான்?

இன்று போய் நாளை வாராய் என்றானே அதுவா?

வீரன் இந்திரஜித்தின் சடலத்துக்கு தன் மேல்துண்டை போர்த்தி ஒரு நாள் போர் ஓய்வு தந்தானே அதுவா?

இங்கு என்னதான் கூறவருகிறீர்கள்? கொழுப்பெடுத்து போய் மாற்றான் மனைவியை அபகரித்தவனுடன் கைகுலுக்கியிருக்க வேண்டுமா அவன்?

அல்லது ஈழத்தமிழர்கள் ராவணன் செய்த கொடுஞ்செயலை போல ஏதேனும் செய்தார்கள் எனக்கூற வருகிறீர்களா?

நீர் வணங்கும் கடவுள் ராமனை நான் கூறிஇருப்பது தவறுதான் ஒப்புக்கொள்கிறேன்......
ராவணனை அழிதத்தும் தப்பில்லை........

கடவுளாயிற்றே கடைக்கண் பட்டாலும் ராவணன் தொலைந்திருப்பான் ..........

ஆம் சுயநலம் ராமனுக்கும் ராவனனுக்கும் இருந்த சுயநலம் இலங்கை இரையானது அன்றும் இன்றும் தமிழ் பலியானது........

மக்கள் செய்த தவறு என்ன அம்மண்ணிலே பிறந்ததா பிஞ்சுகளின் நெஞ்சில் பதிந்த குண்டுகள் நம் நாட்டு அரசியலுக்கு புரியவில்லையே ஏன்?......

நலம் விசாரிக்கிரார்கலம் நயவஞ்சக பேச்சுடன் ஆதிக்க அரசியல் மாறவேண்டும் முதலில் நம் நாட்டில்

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் சொன்னது…

ஆக இலங்கை ரத்தம் குடிக்கும் தாயின் தவப்புதல்வன் !

சுசி சொன்னது…

கடவுளே.. :(((((((((((

மோகன்ஜி சொன்னது…

தம்பி தினேஷ்! ராம ராவணன் இல்லாமலும் இந்தக் கவிதையின் வீச்சை விரிவாக்கியிருக்கிலாம் .. மாறாக சொல்ல வந்த மையக் கருவை திசை திருப்பி விட்டது போல்
தோன்றுகிறது. எனினும் உன் கவிதை தந்த பதைபதைப்பு இன்னும் அடங்கவில்லை எனக்கு.மானுடத்தின் வரலாற்றில் இந்தக் கறை என்று துடைக்கப் படும்..
கண்ணீருடன் மோகன்ஜி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நண்பரே, உங்கள் கவிதை மனதைப் பிழிகிறது. இருந்தாலும், கடவுள் விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம், அது கவிதையின் கருப்பொருளை திசை திருப்புகிறது என்று எண்ணுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன தலைவரே கவிதைகளாய் எழுதிக் குவித்து விட்டீர்கள், ஒவ்வொண்ணா படித்து கமென்ட் போடனும், முயற்சி செய்யறேன்!

Unknown சொன்னது…

thalaiva one different between two war. Ramar destroys, who are all stay behind the bad thoughts,but now kaliugam is running(marumlogam)thats why happening in reverse.i heard in kaliugam krishnar will born to destroy all,(may be god will born like u !!! )enna oruu sinthanai ungal kavithai.realy super.

logu.. சொன்னது…

kana porukkavillai nanbare.

பெயரில்லா சொன்னது…

Superior thorough tips on this page.I’d want to imply taking a look at for example , like burger. Whats your opinion?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி