வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கனா கண்டேன்

கனவொன்று கண்டேன்
நேற்று நள்ளிரவில்
உன் முகம் காண
ஆவலாய் விழிதனில்
வலைவீசினேன்
நின் தந்தையின்
முறுக்கு மீசை - மட்டும்
காட்சிக்கு இரையானது
ஏன் கனவிலும்
நின் முகம்கான
கடுந்தவம் மேற்கொள்ள
வேண்டுமோ நான்?
சொல்லடி என்
பச்சை பசுங்கிளியே............
நின் முகம்
காணும் நாட்களை
தினம் தினம்
வெறுமை கலந்த
தனிமையில்
நின் அன்பிற்காக
ஏங்கி அலைகழிகிறேன்
எனை அரவணைப்பாய்
என்று காலத்தை
கடந்து செல்கிறேன்
நின் வருகையை
நேர்கொண்டு..........

6 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

அழகான வரிகள்

Chitra சொன்னது…

very nice! :-)

சத்ரியன் சொன்னது…

//ஏன் கனவிலும்
நின் முகம்கான
கடுந்தவம் மேற்கொள்ள
வேண்டுமோ நான்?//

தினேஷ்,

காதலின் விதியது.
காத்திருக்கவும், கடுந்தவம் புரியவும் பழகிக்கொள்ள வேண்டும்.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் சத்ரியன்
நான் காதலிப்பது முகம் தெரியாத என் வருங்கால துணைவியை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/b.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி