சனி, 1 ஜனவரி, 2011

இருளின் விடியல் எங்கே..?


வீதியெல்லாம் பட்டாசு சத்தம்
விடியல் காண என்னாச்சு யுத்தம்
வினை விதைத்து தினையருக்கும்
வீனத்தவரின் விளைச்சலிலே
விட்டில் பூச்சின் விடியல் போச்சு

விடியலும் தான் விதைக்குதிங்கு
வினைதனையே விளைபயிராய்
விளைத்திட்டவன் மதி திருந்தி
விண்ணுலகம் சென்றுவிட்டான்
வீதிவுலா ஏற்க்க மறுத்து

விண்ணும் மண்ணும் படைத்தவந்தான் கேள்வியாகிறான்..!
விளையாடும் சதுரங்கமாய் நம் கையிலே..!
வில்லாளன் எவனுமில்லை வினையருக்க..?
வில்லொடித்து புறப்பட தான் போட்டிவேண்டுமோ..?
விருந்தமர்த்தி விலைகொடுத்தால் வினை வீழுமா..?

விட்டில் பூச்சின் விடியல் காண
விலையென்னவோ ..?
விடியாத இரவினிலே
விளையும் பயிர் முளைத்திங்கு
விடியல் காணுமா..?

10 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////விட்டில் பூச்சின் விடியல் காண விலையென்னவோ ..?//////

அருமையான வரிகள் தினேஷ்.... !

Unknown சொன்னது…

விருப்பமெல்லாம் விரைவில் விடியல் தான். விளைவதென்னவோ வேறு.

Meena சொன்னது…

உங்களுடைய கவிதை விடியாத இரவுகளில்
தடுமாறும் உயிர்களோடு அவர்களுக்காக
என்னை வேண்ட வைக்கிறது ஆழம்மான் கவிதைக்கு நன்றி

Meena சொன்னது…

நல்ல கவிதை. உங்களுக்கு இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான வரிகள் தினேஷ்.... !

Unknown சொன்னது…

வி என்னும் எழுத்தை வைத்து வித விதமாய் வித்தை காட்டியுள்ளீர்கள்.
நல்ல விவேகம்.

Unknown சொன்னது…

கவியுக, கலியுக, கவிதையரசன் தினேஷ்குமார் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

இன்று கவிதைக்கு விடுமுறையா?

வைகை சொன்னது…

பங்கு கவிதை நல்லாயிருக்கு! அங்க கொண்டாட்டமெல்லாம் எப்புடி?

ஆமினா சொன்னது…

கவிதை சிந்திக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி