வெள்ளி, 28 ஜனவரி, 2011

வெள்ளி மலர்ந்தது


வியாழன் விடிந்து விரைந்து வலைந்து
வேலைத் தொடர்ந்து மாலை மலர்ந்து
இருளும் சூழ்ந்து இனம் புரியா
அக மகிழ்ச்சி அலைப்பாய

இனியதொரு நட்பின் சந்திப்பில்
கதைகள் பலகடந்து காலங்கள் தாண்டி
அன்பின் பயணத்து அளவில்லா
அரவணைப்பில் அடங்கிபோனேன்

பொழியா மழையது மனமதில் மெய்யா
அடைமழையாய் ஆளும் காற்றுடன்
ஆரவாரமின்றி குளிர்த்து குளித்து நனைந்த
பொழுதில் வெள்ளி மலர்ந்தது

கலியுகம் : அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களின் சந்திப்பில் அடைமழையில் நனைந்த மனம் உதிர்க்கும் வரிகள்

13 கருத்துகள்:

அரசன் சொன்னது…

சூப்பருங்க

அரசன் சொன்னது…

அற்புதமா சொல்லி இருக்கீங்க ..

நானும் உங்க சந்தோசத்தை பகிர்ந்துக்கிறோம்

வைகை சொன்னது…

குளிருக்கு ஒன்னும் சாப்டலையா பங்கு!

karthikkumar சொன்னது…

வைகை said...
குளிருக்கு ஒன்னும் சாப்டலையா பங்கு///

கேக்குரார்ல சொல்லுங்க :)

Chitra சொன்னது…

ஆஹா... சூப்பர்!

ஜெ.ஜெ சொன்னது…

நல்லா இருக்கு சகோ..

சுந்தர்ஜி சொன்னது…

நட்பின் சிகரமய்யா நீர் தினேஷ்.

கலக்ஸ்.

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல நண்பர்கள் நீங்கள் வாழ்க,வாழ்த்துக்கள்

தம்பி கூர்மதியன் சொன்னது…

நீங்க அவர பத்தி சந்தோசபடுறதும், அவரு உங்கள சொல்லி சந்தோசபடுறதும்.. யப்பப்பா.. பாச மழைய பொழியாதீங்கப்பா..

பாரத்... பாரதி... சொன்னது…

உங்கள பாத்தற்கு பிறகு அவரும் கவிதையாக எழுதித்தள்ள ஆரம்பித்து விட்டார்..

பாரத்... பாரதி... சொன்னது…

உங்களுக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு..
ரெண்டு பேரும் பதிவிடுதலிலும், பின்னூட்டமிடுவதிலும் டெரராக இருக்கீங்க..

பாரத்... பாரதி... சொன்னது…

இன்னும் அவரு வதை,வதம்,தாண்டவம் அப்படினு ஆரம்பிக்கவில்லை. அது தான் வித்தியாசம்..

Meena சொன்னது…

வெள்ளி விடுமுறை நாளாதலால் கூறுகிறீர்கள் போலும்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி