ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கழுமரமேறும் கட்டுமரஙகள்...தமிழக அமைச்சா... தமிழக அமைச்சா...
தரங்கெட்டு போவதேனோ...?
தன்னுடல் விற்று
தன்குடில் காப்பவள் கூட....
மாசற்ற மனம் கொண்டாள்..!

வடக்கே விற்று வழக்கே
இல்லா கிழக்கே குவித்த
பணகுவியலாய் பிணக்குவியல்...!?

மாண்டு போக தமிழன்
வரம் பெற்றானா..? மண்ணை
மதித்து மானம் காக்கும்
மறத்தமிழன் மாளவில்லையடா...!
மானுட மிருகமே....

குறுக்கு வழியில் கொழித்து
கோபுர மாக்கல் செழிக்க
இன்னும் எத்துனை கோடி
கொள்ளையடிப்பாய்...!
குருட்டு மிருகமே....

சூளுரைத்து வாள்பிடிக்க
ஆளில்லை...! ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்,- கடுதாசி
எழுதியுள்ளேன் கருணைமனு
கொடுத்துள்ளேன்..
சிறைபிடித்தாயோ எம்மண்ணை..?!
சிருங்காட்டு 'ச்சீ'வனமே...

சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்...

ஆயிரம் தலை கொல்லும்
ஆற்றலும் படைப்பான் அழிவை
நோக்கிப் பயணிக்காதே...!
மயானமாகும்......
மாற்றம்கொள்...,
போற்றுவானே தூற்றுவான்
தூற்றுவானே ஏற்றுவான்.

பொறுக்கா மனம்கொண்டு
பொறுக்கும் உன்னை...
போற்றிச் சொல்லா மானுடம் பிறக்க
மாறும் வனத்தில் மீறும்
மிருகம் மிகையில்லா பகையாகும்.

மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........

28 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை தின்னுட்டு வர்றேன்...................

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ் புலவன் சாபம் போட்டுட்டானேய்யா..........???
புலவனின் சாபம் எத்தனை வலிமை கொண்டதென்று ஆள்பவனே உனக்கு அது தெரியும் நன்று.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வடக்கே விற்று வழக்கே
இல்லா கிழக்கே குவித்த
பணகுவியலாய் பிணக்குவியல்...!?//


கயவர்களே பதில் சொல்லுங்கள்....

மாணவன் சொன்னது…

//மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........///

அனைவரும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடுவோம்.......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//குறுக்கு வழியில் கொழித்து
கோபுர மாக்கல் செழிக்க
இன்னும் எத்துனை கோடி
கொள்ளையடிப்பாய்...!
குருட்டு மிருகமே....//


ஸ்பெக்ட்ரம்...ஊழலின் ஊற்றே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூளுரைத்து வாள்பிடிக்க
ஆளில்லை...! ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்,- கடுதாசி
எழுதியுள்ளேன் கருணைமனு
கொடுத்துள்ளேன்..
சிறைபிடித்தாயோ எம்மண்ணை..?!
சிருங்காட்டு 'ச்சீ'வனமே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்...//


உன் சாம்பல் கூட மிஞ்சாது எச்சரிக்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........//


வெகு தூரமில்லை......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மானம் ரோஷம் இருந்தா [[இருந்தாதானே]] இன்னைக்கே ஊரை விட்டு ஓடிருவான் ஆள்பவன்....
சரியான சாட்டையாடி கவிதை மக்கா.........அற்புதம்.....

மாத்தி யோசி சொன்னது…

உணர்ச்சிப் பிழம்பாய் உங்கள் கவிதை! எல்லோர் உள்ளத்திலும் கனலை மூட்டட்டும்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>>
பொறுக்கா மனம்கொண்டு
பொறுக்கும் உன்னை...
போற்றிச் சொல்லா மானுடம் பிறக்க
மாறும் வனத்தில் மீறும்
மிருகம் மிகையில்லா பகையாகும்.

kalakkal

வினோ சொன்னது…

/ மாண்டு போக தமிழன்
வரம் பெற்றானா..? மண்ணை
மதித்து மானம் காக்கும்
மறத்தமிழன் மாளவில்லையடா...!
மானுட மிருகமே.... /

:)

RVS சொன்னது…

கோபம் தெறிக்குது...நிறைய பேர் கண்டனத்தை பதிவுகள் மூலமாக பதிவு செய்துருக்கோம்...

ருத்ரன் சொன்னது…

சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்...


சொல்ல வார்த்தையில்லை, உந்தன் கவி சிந்தனையை வெல்ல யாருமில்லை...

ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அகத்தின் வெளிப்பாடாக.... இக்க கவிதை.....

தம்பி கூர்மதியன் சொன்னது…

உணர்ச்சி தெறிக்கிறது..

சிவகுமாரன் சொன்னது…

துடுப்பேந்தும் கரங்கள் துப்பாக்கி ஏந்துவதா ? எங்கே தோழரே.... துப்பாக்கி தான் துரத்திக் கொண்டிருக்கிறதே அவர்களை தினந்தோறும் சாவை நோக்கி.
http://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/blog-post_26.html

Philosophy Prabhakaran சொன்னது…

தொடர்ந்து உங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருவதற்கு நன்றி நண்பா...

வெறும்பய சொன்னது…

கோபமான வரிகள்..

தொடர்ந்து இணைந்து துணை நிற்ப்போம் நம் சகோதரர்களுக்காக..

வைகை சொன்னது…

உணர்ச்சிகள் குறையாமல் பார்த்துக்கொள்வோம் பங்கு!

Meena சொன்னது…

எடுப்பானதொரு எச்சரிக்கை

karthikkumar சொன்னது…

தொடர்ந்து போராடுவோம் ஒற்றுமையோடு....

சே.குமார் சொன்னது…

ஒன்றுபடுவோம்...
வெற்றி பெறுவோம்...

கோமாளி செல்வா சொன்னது…

நானும் ட்விட்டரில் குரல்கொடுத்துகொண்டிருக்கிறேன் அண்ணா .. போராடுவோம் ..

/சினம் கொள்ளும் நிலைக்குள்
சீர்படுத்த எத்தனித்து எதிர்கொள்...
ஆயிரமாயிரம் போர்க்கருவிகள்
அடக்கமாகும் உன்னத தமிழர்களின்
அகத்துள் அகம் கொண்ட சினம்
புறம் காண நினைத்துவிடின்.../

கண்டிப்பாக அண்ணா ..

போளூர் தயாநிதி சொன்னது…

//மீள்வதரிது... மீட்டெடு எந்தன்
மீனவ மக்களை..., இல்லையேல்
துடுப்பேந்தும் கைகளும் துப்பாக்கி ஏந்தும..!!
மனதில் வைத்துக்கொள்..........//
அனைவரும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடுவோம்.......

Chitra சொன்னது…

பொறுக்கா மனம்கொண்டு
பொறுக்கும் உன்னை...
போற்றிச் சொல்லா மானுடம் பிறக்க
மாறும் வனத்தில் மீறும்
மிருகம் மிகையில்லா பகையாகும்.


.... சரியா சொல்லி இருக்கீங்க.... விரைவில் விடிவு வர வேண்டும்.

ஆனந்தி.. சொன்னது…

உணர்ச்சி மிக்க கவிதை தினேஷ்...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

குறுக்கு வழியில் கொழித்து
கோபுர மாக்கல் செழிக்க
இன்னும் எத்துனை கோடி
கொள்ளையடிப்பாய்...!
குருட்டு மிருகமே//
அப்படி போடு அருவாளை

ஹேமா சொன்னது…

அழுத்தம் கூடக் கூட கடைசிப் பந்தியில் சொன்னதுபோலத்தான் ஆகும் !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி