ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழே என் தமிழே ..!


தமிழே என் தமிழே ..! அன்னை
உன்னை மூலமெனக்கொண்டு
முன்னுயர ஆசையின்றி தமிழ்
முதனெழவே ஈடாக வகுத்திருந்த
முன்னெழு பின்னெழு முற்றமிழை
என் தமிழ்க்கு தமிழ் மூலம்
அறிந்திட்டாய் உன் மூலம்
தமிழ் செழிக்க நீ தொகுத்திருக்கும்
தொகுப்பிலக்கம் முதல் இலக்கியம்
என் மூத்த தமிழுக்கு அறிதிருக்கும்
அவனியில் பிரிதிருக்கும் எங்கும்
துளிர் துளிர் துளிர்த்திருக்கும்
மண்ணில் தழைத்திருக்கும்
விண்ணுயர முளைத்திருக்கும்
கடுகளவு கற்றுள்ளேன் என்னுள்ளில்
என்னுள்ளிருந்து எனை திருத்து
எனையாளும் தமிழே தமிழ் செழிக்க
சரணடைகிறேன் உன்பாதமத்தில்
என்னில் மரணித்து மரணித்து
மீண்டு உயிர்பித்து உயிர்பித்து
தொடர்ந்துன்னை தொடர்வேன்
தமிழ் தொண்டாற்ற மண்ணில்
என்னை வழி நடத்து தமிழ்த் தாயே
உன் பாதமத்தில் வீழ்கிறேன்......

கலியுகம் : தமிழர் திருநாளில் அன்னைத் தமிழுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்

12 கருத்துகள்:

தம்பி கூர்மதியன் சொன்னது…

தமிழை போற்றுகிறேன்..
உங்கள் வரிகளை தமிழ் தாய் ஏற்றிடுவாள்..

பாரத்... பாரதி... சொன்னது…

//எனையாளும் தமிழே தமிழ் செழிக்க
சரணடைகிறேன் உன்பாதமத்தில்
என்னில் மரணித்து மரணித்து
மீண்டு உயிர்பித்து உயிர்பித்து
தொடர்ந்துன்னை தொடர்வேன்//


தமிழ் தாயை சரணமடைந்து, தமிழ் செழிக்க கவிதை தவமிருக்கும் உம்மால் தமிழ் இனி சாகாது நிலைத்திருக்கட்டும் எந்நாளும்..
கவிதைக்கு நன்றி தினேஷ்....

ஆனந்தி.. சொன்னது…

அற்புதமான வரிகள்...

தோழி பிரஷா சொன்னது…

அருமையான வரிகள் சகோ.. பொங்கல் வாழ்த்துக்கள்....

Chitra சொன்னது…

அபாரம்! ரசித்து வாசித்தேன்!

சே.குமார் சொன்னது…

அற்புதமான வரிகள்.
ரசித்தேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

PONGAL SPL POST? OK OK

ரிஷபன் சொன்னது…

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

ஹேமா சொன்னது…

தினேஸ்...உங்களின் தமிழ்ப்பற்று ஒவ்வொரு கவிதையிலும் உயர்ந்துகொண்டே போகிறது.அவ்வளவு அருமையாயிருக்கு வரிகள் !

Philosophy Prabhakaran சொன்னது…

நம்ம எல்லாருக்குமே அன்னை அவங்கதானே... அவங்களை தலை வணங்குவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தமிழே என் தமிழே........... !

vasan சொன்னது…

தமிழுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழருக்கு,
உயிரிகளின் உயிராகிய உழவர்களுக்கு,
அவனுக்கே உழைக்கும் மாடுகளுக்கும்
தினமும்ஒளியும் வலிவும் தரும் சூரியனுக்கு,
இந்தப் பொங்கலில் நன்றி கூறி,
மகிழ்ச்சி, அன்பு, நலம், வளம்
அனவருக்கும் பெருக வாழ்த்துவோம்.
பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி