செவ்வாய், 18 ஜனவரி, 2011

"சொல்வாயோ ..? (அ ) கொல்வாயோ..?"


விருட்சமென்று நீ படர்ந்தாய்
நீயுதிர்க்கும் இலையின் சருகாக
நான் படர்ந்தேன் எனை
ஏன் படைத்தாய்

சருகாக நான் பிறந்தும்
எருகாக மாறிய கோலம்
உனை எரிக்கும் சாம்பலிலே
பிழைத்திருக்கும் பல்லுயிர்
என்றாய் பொறுத்திருந்தேன்

நினைத்திருந்தேன் உன்னை
நெஞ்சில் சுமந்திருந்தேன்
அழைத்திருந்தாய் அண்மையில்
பிழைத்திருந்தேன் குழி பறித்தாய்
குழிக்குள் எனை யமர்த்தி ..........


17 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

உங்களுக்கு பின்னூட்டக் கவிஞர் என்று பட்டம் கொடுக்கலாம்.

Chitra சொன்னது…

ஆஹா... !!!

சே.குமார் சொன்னது…

Pinnuttak KAVI vazhaka.

கவிதை காதலன் சொன்னது…

பின்னூட்டமே இப்படியா? அருமை..


குறிப்பில் இருக்கும் பிழையை கொஞ்சம் கவனியுங்கள்

sakthistudycentre-கருன் சொன்னது…

உங்களுக்கு பின்னூட்டக் கவிஞர் என்று பட்டம் கொடுக்கலாம்.
வழிமொழிகிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>
அழைத்திருந்தாய் அன்மையில்

3 SUZI IN TO ANMAI

FARHAN சொன்னது…

பின்னூட்டமே ஆயிரம் பதிவுகளுக்கு சமனான கருத்துக்கள்
நினைத்திருந்தேன் உன்னை
நெஞ்சில் சுமந்திருந்தேன்
அழைத்திருந்தாய் அண்மையில்
பிழைத்திருந்தேன் குழி பறித்தாய்

குழிக்குள் எனை யமர்த்தி ..........

மாணவன் சொன்னது…

கொன்னூட்டீங்க வரிகளால்...

நல்லாருக்கு நண்பரே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பின்னூட்டத்துலேயும் பின்றாருப்பா நம்ம தினேஷ்..........!

பாரத்... பாரதி... சொன்னது…

விருட்சமென்று நீ படர்ந்தாய்....

நீ வேண்டாமென உதிர்க்கும்
இலையின் சருகாக
நான்...

இருந்தாலும் கூட
உரமாகி மீண்டும் உன்னுள்
கலந்தேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//குழி பறித்தாய்
குழிக்குள் எனை யமர்த்தி ..........///

ஆள் அவுட்டே....

சுந்தர்ஜி சொன்னது…

இது பின்னூட்டம்ல்லாம் இல்ல தினேஷ்.எல்லோருக்கும் முன்னூட்டம்.

உங்க ஆஃபீஸ்ல வந்து பாக்கணும்.வேற ஏதாவது வேல கீல செய்றீங்களா இல்லையான்னு.

கோமாளி செல்வா சொன்னது…

இதுதான் பின்னூட்டக் கவிதையா ?

Philosophy Prabhakaran சொன்னது…

பின்னூட்டமே இப்படியா... கலக்கல் நண்பா... இணைத்துள்ள படம் செம...

ஆமினா சொன்னது…

சூப்பர்

Meena சொன்னது…

குழி பறிக்கும் வேலையைத் தடுக்கும் ரகசியம் எதுவாய் இருக்கும்?
அனைவரும் அவசியம் அறிய வேண்டும்

பெயரில்லா சொன்னது…

Great internet site, I appreciate that the site looks! The fashion is fabulous!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி