திங்கள், 29 நவம்பர், 2010

"கொய்யப்பட்ட ரோசாவே"



கருப்பாடு களமிறங்கி
களவாடி உறவாடிய
கரைச் சேரா கனவுகண்டு
கரைந்து வாழும் உள்ளமிங்கு

காதலைத்தான் கைக்கழுவ
காதல் செய்த குற்றமிங்கு
கிளிப்பேச்சு கேட்க வந்து
கிழிந்த காகிதம் ஆனேன்

கீழ்வானம் சாட்சி சொல்ல
கீரி ருசித்த பாம்பானேன்
குழந்தையான குணமொன்று
குழைந்து குரோதமானதே

கூவி கொக்கரித்தால்
கூடுமே கூட்டமிங்கு
கெத்தாக ஆண் நிற்க
கெட்டுப்போன பெண்ணாவேன்

கேளாத உலகமிது
கேட்போரும் இச்சையுடன்
கை பிடித்த அரளி விதை
கை கோர்க்கும் கனவுகள் மறைய

கொடும்பாவம் செய்த எம்மை
கொல்லாமல் விடமாட்டேன்
கொடுஞ்சினம் தான் கொக்கறிக்க
கொய்யப்பட்ட ரோசாமலர் - பேச

கோழைத்தனம் வேண்டாமடி
கோபம் கொள்ளக் கூடாதடி
கோகுலத்தின் ராதைக் கூட சீதைதானடி
கோரைப் புல்லாய் நிமிர்

கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...............

டிஸ்கி : பாதிக்கப்பட்ட ஒரு மங்கையின் நிலையிலிருந்து நான் எழுதிய வரிகள் தவறிருந்தால் இம் மா பாவியை மன்னித்தருள வேண்டும் தாய்குலமே

27 கருத்துகள்:

Chitra சொன்னது…

கவிதை - ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... ஒரு பத்திரிகைக்கு எழுதி அனுப்பலாமே.

நிலாமதி சொன்னது…

பெண்மையின் வலி ஆழ உழுது செல்கிறது. நன்றாக வந்திருகிறதுபாராடுக்கள்.

வினோ சொன்னது…

கவிதை வலியை உணர்த்துகிறது...

அன்பரசன் சொன்னது…

உணர்வுப்பூர்வமா இருக்குங்க.

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதை நல்லா இருக்கு... அப்போ, நீங்க ராசாவை பத்தி எழுதவில்லையா...

மாணவன் சொன்னது…

//டிஸ்கி : பாதிக்கப்பட்ட ஒரு மங்கையின் நிலையிலிருந்து நான் எழுதிய வரிகள் தவறிருந்தால் இம் மா பாவியை மன்னித்தருள வேண்டும் தாய்குலமே//

உணர்வுகளை வலிகளுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் சார்,

தொடரட்டும் உங்கள் பணி...

சிவராம்குமார் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு தினேஷ்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உணர்வுப்பூர்வமா இருக்குங்க...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...

karthikkumar சொன்னது…

வலிகள் மிகுந்த வரிகள்

பெயரில்லா சொன்னது…

அருமையா எழுதியிருக்கீங்க..

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...

shammi's blog சொன்னது…

nalla irukkunga...

சுசி சொன்னது…

நல்லா இருக்குங்க.. சித்ரா சொன்னதையே நானும் சொல்றேன் :))

ஹேமா சொன்னது…

வலியிலும் ஒரு சுகம்
ஒரு அழகுதான் !

Unknown சொன்னது…

//கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...............//

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதை நன்கிருக்கிறது!
தங்களுக்காக அழகான விருதுகள் என் வலைத்தளத்தில் காத்திருக்கின்றன. வந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

Unknown சொன்னது…

நீங்க ஒரு கவிதை குடோன் சார் , ரூம்போட்டு யோசிபிகளா ?கவிதை அருமை அருமை

ஆர்வா சொன்னது…

இவ்ளோ எக்ஸலண்ட்'ஆ எழுதிட்டு... கடைசியில என்ன டிஸ்கி... சூப்பர் பாஸ்..

Unknown சொன்னது…

அடுத்த பதிவு எப்ப?
என அகில உலக தினேஷ் ரசிகர் மன்றம்.( கிளைகள் இல்லை)

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் சொன்னது…

அழகு அழகு !.. .காமெடி புகைப்படத்த வந்து பரு !.. சிரி சிரி நு சரிப்ப! http://goldframenagarajacholan.blogspot.com/2010/11/blog-post.html

vanathy சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. மனதை தொடும் வரிகள்.

ஆனால், அந்த பாம்பு படம்... அதுக்கு பயந்திட்டே நான் இந்தப் பக்கம் வரலை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்தக்கவிதை செம.

>>
கீழ்வானம் சாட்சி சொல்ல
கீரி ருசித்த பாம்பானேன்>>>

கீரி பாம்பை ருசிப்பதில்லை.சும்மா எதிர்க்கும் அவ்வளவுதான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டைட்டிலிலேயே கதை சொல்லும் கவிதை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆ ராசா பிரபலமான டைமில் இப்படி டைட்டில் குடுத்த உங்க ஐடியா சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதை....!

பெயரில்லா சொன்னது…

Simply, all of the upload is usually the biggest during this laudable subject matter. When i recognize in your summary and definately will thirstily await ones own future changes. Thinking thanks a lot won't only be adequate, for any awesome lucidity in your coming up with. I may immediately find all your rss to live privy from a upgrades. Good deliver the results and far achieving success inside your corporation!

Kayathri சொன்னது…

கௌரவம் தான் வாழ்க்கையென்றால்
கௌரவிக்க எவரும் இலர் இப்புவிதனிலே
கௌரவிக்க வாழ்வேனடி-சிசுவை
கௌரவிக்க வாழ்வேனடி...அருமையான கவிதை சகோ.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி