புதன், 12 ஜனவரி, 2011

பொங்கிட பொங்கிட பொங்கலோ.....



கோவக்கார கோரைப்பல்லு கோணத்தீ கோவத்தில்
தனையறுக்க தலைகுனிந்து தரை நோக்கும்
அரி துயிரின் தன்மானத்தில் தழைத்தோங்க
வதைத்து வரம் வேண்டி வரம்கொடுக்க

பசியுணர்த்தும் பகைவன் அல்ல பாரின்
பசியறிந்த காரணமோ நிலம் திருத்தி
பச்சையம் கொன்று மனம் அறுத்ததேனோ..?!
நீடுழுது பாடுபட்ட விவசாயி பசியுணர்வாயோ...?


விளைந்த நிலம் விழிபிதுங்கி முற்றம்கொண்ட
மொழி மழுங்கி தனை சுருக்கி கண்ணீரில்
கொட்டமடி கும்மியடி மொட்டைமாடி கூத்தடித்து
கூடிநில்லா கூட்டுக்குள் பொங்கவரும் பொங்கலுங்கோ

பொருளுயர்த்த போட்டி போட்டு மனையறுத்து
தினையறுக்க திட்டம் தீட்டி வினையறுத்து
பொன்னிருந்தும் மண்ணிழந்து மதிகெட்டு ஓடுகிறாய்
பணம்பின்னே பொருந்திருந்து யோசி... பொங்கலன்று..!

மெய்மையான வழிதவறி பொய்மையான வழிதனிலே
ஒத்தரூபா அரிசி கூட விளைந்த திங்கில்லை..!
செங்கரும்பு தோட்டத்திலே கரும்புடைத்து
ஆவாரம்பூ மெல்ல சிரிக்கும் மண்மணக்க

கண்ணுக்கழகா மச்சான் விளைந்திருக்கு
மண்ணுக்கழகா மண்ணும் சிவந்திருக்கு
சொல்லுக்கழகா ஏர்பிடித்து மண்ணிற்காக
மார்தட்டி பொங்கல் வைக்கும் ஏர்கரம்

எங்கே ? எங்கே ? எங்கே ?

பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்
காணும் பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கிட பொங்கிட பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

24 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சுடு சோறு எனக்கே...

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.........

மாணவன் சொன்னது…

கிராமத்து நிகழ்வுகளை வரிகளில் சொல்லியிருக்கீங்க அருமை...

செல்வா சொன்னது…

//பொருளுயர்த்த போட்டி போட்டு மனையறுத்து
தினையறுக்க திட்டம் தீட்டி வினையறுத்து
பொன்னிருந்தும் மண்ணிழந்து மதிகெட்டு ஓடுகிறாய்
பணம்பின்னே பொருந்திருந்து யோசி... பொங்கலன்று..!//

ரொம்ப யோசிக்க வேண்டிய வரிகள் அண்ணா ., இப்பவெல்லாம் அதிகமா அதுவும் எங்க ஊர்ப்பக்கம் அதிக விலைக்கு விளைநிலங்கள் விற்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

சிவகுமாரன் சொன்னது…

\\\மண்ணிற்காக
மார்தட்டி பொங்கல் வைக்கும் ஏர்கரம்//

நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்

இளங்கோ சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

பொங்கலோ பொங்கல், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

விவசாயிகள் வாழ்வை சரியாக எடுத்துக்காட்டியுள்ளது கவிதை, சோகம் தவழ்ந்தாலும், பொங்கல் பொங்கும் போது மகிழ்ச்சியில் சோகங்கள் மறைகிறது, தற்காலிகமாவது...
நன்று தினேஷ்..

Unknown சொன்னது…

//மண்ணிழந்து மதிகெட்டு ஓடுகிறாய்பணம்பின்னே பொருந்திருந்து யோசி... //

karthikkumar சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள். பங்கு.....

Chitra சொன்னது…

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க ... உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொங்கலோ பொங்கல்......!

arasan சொன்னது…

அசத்தல் கவிதை வழங்கிய உங்களுக்கும்

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

dheva சொன்னது…

தினேஷ்.....பொங்கல் வாழ்த்துக்கள் பா.........

இவ்ளோ அருமையா எழுதியிருக்கியே......பத்து பொங்கல் வாழ்த்து அட்டைக்குத் தேறுமே?

Ramesh சொன்னது…

அருமையான வாழ்த்துக்கவிதை நண்பா.. படங்களும் அருமை.. வெண்பா தெரிஞ்சு எழுதறீங்களா நண்பா..

ஆர்வா சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே.. ஒரு கிராமத்துக்குள் கைப்பிடித்து அழைத்து சென்ற உணர்வை விதைத்திருக்கிறீர்கள்..

பெயரில்லா சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு

raji சொன்னது…

//பொங்கல் வைக்கும் ஏர் கரம் எங்கே?// அருமையான வரிகள்.

இனிமையான பொங்கல் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நீடுழுது பாடுபட்ட விவசாயி பசியுணர்வாயோ...?////

சிந்திக்க வைத்த வரிகள்!

பெயரில்லா சொன்னது…

In the instance that you’re nevertheless on the fence: grab the best earbuds, top of the head as small as a real Best Buy and get to be able to put these guys towards a Microsoft zune therefore an iPod to check out what sort appears simpler most people, along with that will software allows you to be be happy way more. Therefore you’ll be aware of that is definitely perfect for you.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி