வெள்ளி, 28 ஜனவரி, 2011

சூடாமணி ...



ஆடை யிழந்து வாடை மறந்து
கபாலநாடி காட்டும் சன்னலறுத்து சகி
மாடம் தவிர்த்து மீளு மது
மதிகெ ட்டோன் சாகுமிடத்து சன்னதி

மறுமதி மீளுமதி சூடாமணி
வெள்ளொருத்து விலைமருந்து
சில்லெடுத்து சினம் கொள்வாயேன்..?
சித்தம் தெளியும் உத்தமனாம்.

கலனும் நிறையும் காலன் கரையில்
தருணம் கருணம் கர்மத் தொடறேன்
நிலமத்தில் வேலினரைத்தான் பொருட்
கொள்ள மறுத்த மயானம்

மறுகும் கனனம் அழிவின் சரணம்
எளிதாய் விறகும் கற்று வித்தான்
காட்டான் காரியம் சூடும் மலரது
நாற்றம் நாசி மரணம்.

25 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹேய் தமிழ்
தாண்டவம் ஆடி
வதம் வதைத்து
வந்தோரை மகிழ்விக்கும்
சந்தோசத்தின் பிம்பமாகி
சந்திரனாய் சூரியனாய்
உன் எழுத்து
என்னை கவர்கிறது
வானத்தின் நட்சத்திரமாய்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சித்தம் தெளியும் மருந்து இதுல இருக்காம். கண்டுபிடிங்க பார்ப்போம்....

ம.தி.சுதா சொன்னது…

அருமையான வரிக் கோர்ப்புகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தினேஷ்...
உங்கள் கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சியே நிற்கின்றன. சித்தம் தெளியும் மருந்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பரிடம் கேட்டு வருகிறேன்.

Unknown சொன்னது…

கோனார் விளக்கம் கிடைக்குமா?
ரொம்பவும் கண்ணைக்கட்டுதே...

Unknown சொன்னது…

//சித்தம் தெளியும் மருந்து இதுல இருக்காம். கண்டுபிடிங்க பார்ப்போம்....
//
ஓ..இதுல டான்ஸ் வேற ஆடணுமாம்?

Unknown சொன்னது…

யாரங்கே.. நம்ம கவிஞருக்கு ஒரு கலைமாமணி விருது ஒண்ணு அனுப்புங்க..

Chitra சொன்னது…

பாரத்... பாரதி... said...

யாரங்கே.. நம்ம கவிஞருக்கு ஒரு கலைமாமணி விருது ஒண்ணு அனுப்புங்க..


......சொல்லிட்டேன்ங்க ..... இதோ கொண்டு வராங்க..... இந்த வருஷம், ஐயாவுக்குதான் அறிவிச்சிட்டாங்க!

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு கவிஞர் தினேஷ் தம்பிக்கு, உங்களின் கவிதைகள் நல்ல மெருகேறுகின்றன. தமிழின் நுண்மைகளை வன்மையாய் கையாண்டு தமிழுக்கு நன்மையை செய்யும் நின் தொண்டு மேலும் வளர வாழ்த்துக்கள்.

சித்தர்களின் பரிபாஷையை மிக நுணுக்கமாக கையாண்டு திறம்பட எழுதி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள். உங்களின் இந்த கவிதையில் இருந்து மகா இரகசியங்கள் அம்பலமாகி உள்ளன. சித்த சுவாதீனத்துக்கான வைத்தியம் பேசி இருக்கிறீர்கள். சித்தர்களின் நிலை பேசி இருக்கிறீர்கள். வாழ்வியல் நிலையாமையும் பேசி கடைசியில் காயசித்தி எனும் மகா சூட்சுமத்தையும் இரகசியமாய் வெளிப்படுத்திய உங்களின் அபார திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க நின் தமிழ்த் தொண்டு. வளர்க நம் தமிழ்.

மாணவன் சொன்னது…

நாளுக்கு நாள் உங்கள் தமிழின் ஆர்வம் வியக்க வைக்கிறது நண்பரே
வரிகளை கையாணட விதம் அருமை

தொடரட்டும் உங்கள் தமிழ் கவிதைப்பணி...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யாரப்பா அது மரபுக்கவிதை எல்லாம் எழுதறது?...ஜனரஞ்சகமா எழுதவும்.. இல்லைன்னா உதை தான் விழும்..ஹா ஹா ஹா

ஆனந்தி.. சொன்னது…

எம்மா...வார்த்தையில் வித்தை காமிகிரிங்க...செமத்தியான தமிழ் பிரயோகம் தினேஷ்...

karthikkumar சொன்னது…

பின்றீங்களே!!

Ram சொன்னது…

இப்பவே கண்ண கட்டுதே.!!!
திரும்பவும் என்ன 6வது இலக்கிய பாடபுத்தகத்த படிக்க வச்சிடாங்களே..
இப்படி தாங்க யானும் ஆரம்பத்துல எழுதிகிட்டு இருந்தன் சில பல மிரட்டல்பிறகு மாத்திகிட்டன்..
அதனால இத படிக்க எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியல..
ஆனா படிக்கும்போது ஒரு இன்ட்ரஸ்ட் குறையுது நண்பரே.!!!

@மனோ: பாஸ் உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா..???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//@மனோ: பாஸ் உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா..??? //

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்"
ம்ம்ம்ம் தினேஷ் கூட செர்ந்துட்டோமில்லே இனி தமிழ் நமக்கும் வந்துரும்ல ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//யாரங்கே.. நம்ம கவிஞருக்கு ஒரு கலைமாமணி விருது ஒண்ணு அனுப்புங்க..//

அப்போ இது வரை நீங்க குடுக்கலையா........
ஓகே ஓகே சீக்கிரமா அனுப்புங்க....

ருத்ரன் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
யாரப்பா அது மரபுக்கவிதை எல்லாம் எழுதறது?...ஜனரஞ்சகமா எழுதவும்.. இல்லைன்னா உதை தான் விழும்..ஹா ஹா ஹா.


மரபுக்கவிதை என்று சொல்லிவிட்டீர்கள், அதற்க்கு அர்த்தம் புரியவில்லையோ, புரிய வேண்டுமென்றால் சங்க இலக்கியம் கற்றுவாரங்கள்...... இல்லை உதைதான் வேண்டும் என்றால் சொல்லி அனுப்புங்கள், வருகிறேன்..... கவிதை நயத்தை புரிந்து கொள்ள முடியாத மூடனாக இருக்காதிர்கள். ஒரு கவிஞனை பார்த்து உதை விழும் என்று சொல்பவன் கவிஞனாக இருக்கமுடியாது. கவி என்று உனக்கு இவ்வார்த்தையை பயன்படுத்தியதற்க்காக, (என் தாய் தமிழிடம் மண்ணிப்புக் கேட்கிறேன்)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ருத்ரன் சார் வணக்கம். முதலில் மன்னிக்கவும். நான் தினெஷை நணப்ன் என்ற முறையில் ஜாலியாக சொன்ன வார்த்தை அது.. மற்றபடி மரபுக்கவிதையை கேலி செய்யும் எண்ணமோ அதற்கான அருகதையோ எனக்கு இல்லை..பொதுவாக இந்த கமெண்ட் கூறப்பட்டதாக யாராவது நினைத்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

தினேஷ்குமார் சொன்னது…

ருத்ரன் said...


சி.பி சார் அவர்கள் நல்ல நண்பர் அன்புள்ளம் கொண்டு ஜாலியாக கூறியுள்ளார் தவறாக என்ன வேண்டாம் அண்ணே அனைவரிடமும் அன்பாகவே இருப்போம்

ADMIN சொன்னது…

கலியுகத்தில் இங்கே ஒரு தமிழ்ப்புலவர் உருவாகிறாரோ..? என்னும் விதம் எண்ண வைக்கிறது.. தொடருங்கள்..!

வினோ சொன்னது…

தல விளக்கம் வேண்டும்....

ருத்ரன் சொன்னது…

ஐயா, சி.பி.செந்தில்குமார் அவர்களே தயவு செய்து என்னை மன்னிக்கவும், உங்கள் இருவரின் நட்பை பற்றி எனக்கு தெரியாது மன்னித்துவிடுங்கள்....

என்னுடைய வார்த்தைகள் உங்கள் மனதை மிகவும் புன்படுத்தியுள்ளது போலும், இதற்க்காக என்னை மீண்டும் மன்னியுங்கள்.....

உங்கள் (comment)ல், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளீர்கள், மன்னிக்கவும் உங்களை மன்னிக்க எனக்கு வயதில்லை......

மேலும் நட்பைப் பற்றி அறியாதவனும் நானில்லை, ஏனெனில் நட்புக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பவன் நான்.....

இக்கனம் முதல் உங்கள் நண்பராக ருத்ரன்......

ஹேமா சொன்னது…

அப்பாடி....தமிழின் அழகோ அழகு.புரியாவிட்டாலும் தமிழோடு நனைதல் சுகம் தினேஸ் !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ருத்ரன் அவர்களுக்கு ,, விட்டுத்தள்ளுங்கள்.. நடந்ததை மறப்போம் நடப்பதை நினைப்போம் என்றும் நட்புடன்....

G.M Balasubramaniam சொன்னது…

கவிதையுடன் கூடவே ஒரு பத உரை, ஒரு பொழிப்புரையும் பதிவிடவும். நீங்கள் கூற வருவது படிப்பவரை சென்றடைய வேண்டும். படிப்பவர் அனைவரும் ரசிக்க வேண்டாமா.?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி