வியாழன், 6 ஜனவரி, 2011

மனோ தத்துவம்..

உன்னை கொஞ்சம் நெனச்சுப்பாரு
உள் மனச கேட்டுப்பாரு பள்ளிகூட
பிள்ளை கூட சுமை சுமக்குதையா
உள்ளுக்குள்ள உறக்கம் வேண்டாம்
உண்மை சொல்ல தயக்கம் வேண்டாம்

கல்லிருக்கும் முள்ளிருக்கும் காட்டுவழி
பயணமில்லை பயம் வேண்டாம்
உடல் கூட்டின் ஆசை கொண்ட
உணர்வுகளின் வேஷம் வேண்டாம்
சொல்லித்தர யாரும் இல்லை
வேதனையின் சோர்வு வேண்டாம்

உனக்குள்ளே உறங்குகிறான்
உள்ளுணர்வாய் ஏங்குகிறான்
உணர்வாயோ உன்னை
உணர்ச்சிகள் தவிர்த்து
உன்னதமான உண்மையின் தத்துவத்தை....


24 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////உடல் கூட்டின் ஆசை கொண்டஉணர்வுகளின் வேஷம் வேண்டாம்//////

ஆஹா....

Chitra சொன்னது…

உனக்குள்ளே உறங்குகிறான்
உள்ளுணர்வாய் ஏங்குகிறான்
உணர்வாயோ உன்னை


... very nice...super!

வினோ சொன்னது…

/ உணர்வாயோ உன்னை
உணர்ச்சிகள் தவிர்த்து
உன்னதமான உண்மையின் தத்துவத்தை.... /

:)

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல தத்துவ கவிதை அண்ணே... மிகவும் ரசித்தேன்...

வைகை சொன்னது…

படத்துல இருக்கது யாரு பங்கு?

வைகை சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு!

Meena சொன்னது…

விவேகானந்தரை ஜெய்த்து விட்டீர்கள் .
நிறைய கற்றுக் கொள்கிறேன் கவிதையில் இருந்து தொடருங்கள்

karthikkumar சொன்னது…

உடல் கூட்டின் ஆசை கொண்டஉணர்வுகளின் வேஷம் வேண்டாம்///அருமை வரிகள் ...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கவிதைன்னா கொஞ்சம் பயம் மக்கா ...விமர்சனம் சொல்ல தயக்கம் .(கவிதை பத்தி ரொம்ப சொல்ல தெரியாது )......டேம்பல்டே கமெண்ட்ஸ் தான் போடுவேன் ......

கவிதை நல்ல இருக்கு .......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உடல் கூட்டின் ஆசை கொண்டஉணர்வுகளின் வேஷம் வேண்டாம்//////

ஆஹா....

//

பன்னி..நிசமாவா சொல்றே...?

இல்ல.. எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் ..ஹி..ஹி..

ஆனா.. புரிஞ்சமாறி பதில் சொல்லியிருக்கே பாரு...

உன் வீரத்தை ...எதுல வெச்சு பாராட்டனுமுனு தெரியலையா எனக்கு.!!!!..

எஸ்.கே சொன்னது…

//உடல் கூட்டின் ஆசை கொண்ட
உணர்வுகளின் வேஷம் வேண்டாம்//
சூப்பர் சார்!

எஸ்.கே சொன்னது…

சைக்காலஜி!!
ரசிக்கும்படியான கவிதை!

அருண் பிரசாத் சொன்னது…

கவிதைல தத்துவமா?

இல்ல தத்துவ கவிதையா?

நல்லா இருக்குங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பட்டாபட்டி.... said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உடல் கூட்டின் ஆசை கொண்டஉணர்வுகளின் வேஷம் வேண்டாம்//////

ஆஹா....

//

பன்னி..நிசமாவா சொல்றே...?

இல்ல.. எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் ..ஹி..ஹி..

ஆனா.. புரிஞ்சமாறி பதில் சொல்லியிருக்கே பாரு...

உன் வீரத்தை ...எதுல வெச்சு பாராட்டனுமுனு தெரியலையா எனக்கு.!!!!.. /////

ங்ணா... பெரிய மனுசங்க வந்து போற எடத்துல ஏனுங்ணா இப்பிடி மானத்த வாங்குறீய்ங்க? உங்களுக்கு தெரியாதுங்களாங்ணா.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>உன்னை கொஞ்சம் நெனச்சுப்பாறு

change tha last letter ru

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>உள்ளுகுள்ள உறக்கம் வேண்டாம்

add ka

ullukkulla

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

the rhyme is good. the image selection is correvt. keep it up

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உடல் கூட்டின் ஆசை கொண்டஉணர்வுகளின் வேஷம் வேண்டாம்//////

ஆஹா....

//

பன்னி..நிசமாவா சொல்றே...?

இல்ல.. எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் ..ஹி..ஹி..

ஆனா.. புரிஞ்சமாறி பதில் சொல்லியிருக்கே பாரு...

உன் வீரத்தை ...எதுல வெச்சு பாராட்டனுமுனு தெரியலையா எனக்கு.!!!!..

ha ha pattaapattikku sema nakkal always

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
லையா எனக்கு.!!!!.. /////

ங்ணா... பெரிய மனுசங்க வந்து போற எடத்துல ஏனுங்ணா இப்பிடி மானத்த வாங்குறீய்ங்க? உங்களுக்கு தெரியாதுங்களாங்ணா.....

January 7, 2011 11:08 AM

ha haa haa appoo i am also a bid shot? thanx ramsamy annae

ஹேமா சொன்னது…

மனிதன் தன்னைத் தானே சரியாக உணர்ந்திருந்தால்....உலகில் நாட்டில் ஏன் இத்தனை கலகம் !

Unknown சொன்னது…

அருமை சகோ.. வர வர புலவராயிட்டே வரீங்க...
கவிஞராகவே இருங்க, எங்களுக்கு நல்லது.

ஆமினா சொன்னது…

/// உணர்வாயோ உன்னை
உணர்ச்சிகள் தவிர்த்து
உன்னதமான உண்மையின் தத்துவத்தை.... //

ரசித்த வரிகள்!!!!!!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

arasan சொன்னது…

நல்லா இருக்குங்க

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி