ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நீ யாரடியோ..? என் செல்லக்கிளியே..


என்னை எண்ணி நோன்பிருக்கும் என்னவளே
காணாது தவிக்கிறேன் நான் தன்னந்தனியே
தனியாக நானிருக்க வரம் பெற்றாயோ - நான்
உனைநினைத்தே தவமிருக்கிறேன் வரம்தருவாயோ?

பனிப்பாறை போலிங்கு உள்ளம் உருகுதே
கானலான உன் வரவை தினம் தேடுதே
என்னுள்ளே மறைந்திருக்கும் நங்கை நீயோ - என்னை
அறியாமல் அலைய வைக்கும் மாயை ஏனோ ?.

நீ யாரடியோ..? என் செல்லக்கிளியே..
பச்சைப்பிள்ளை போல தவிக்கவிட்டு
காணாது காவலிருக்காய் உள்ளுக்குள்ளே
விடையறியாத வினாவாகிறேன் நானுமிங்கு.

நின் வாழ்வு என்னோடு நிழலாக நானிங்கு
கொஞ்சும் கிளியே உனக்காக காத்திருக்கும்
காத்தவராயனாய் கழுமரமேற துணிந்திருக்கேன்
வா வெளியே என் செல்லக்கிளியே....

20 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

சீக்கிரமே செல்லக்கிளி கிடைக்கட்டும்...

Philosophy Prabhakaran சொன்னது…

அதுசரி இப்பதான் ப்ரோபைலில் பார்த்தேன்... நீங்கள் நெல்லிகுப்பமா...? சுண்டக்கஞ்சிக்கு ரொம்ப பேமஸ் ஆச்சே...

Philosophy Prabhakaran சொன்னது…

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

vanathy சொன்னது…

nice one.

வைகை சொன்னது…

பங்கு யாரு இந்த செல்லக்கிளி?

தினேஷ்குமார் சொன்னது…

Philosophy Prabhakaran said...
அதுசரி இப்பதான் ப்ரோபைலில் பார்த்தேன்... நீங்கள் நெல்லிகுப்பமா...? சுண்டக்கஞ்சிக்கு ரொம்ப பேமஸ் ஆச்சே...

வணக்கம் பிரபா நெல்லிக்குப்பம் நீங்க நினைக்கற மாதிரி ஊர் அல்ல சென்னையில் உள்ள பாரீஸ் கார்னர் க்கும் எங்க ஊருக்கும் சம்பந்தம் உண்டு அதே சமயம் கரும்புக்கு பேர்போன ஊர் பழமைவாய்ந்த சிவன் ஸ்தலங்கள் சுற்றி இருக்கும் ஊர் ஆகாய நாதர், பூலோகநாதர், கைலாசநாதர் மற்றும் திருகண்டேஸ்வரர் , இவர்கள் ஊரின் அகத்தே இருக்க புறத்தே இன்னும் தெய்வ ஸ்தலங்கள் அதிகம் உள்ள ஊர்...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பிரபா ......

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா வந்திருக்கு.

பெயரில்லா சொன்னது…

2011 தீபாவளி தலை தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

செல்லக்கிளி பறந்து வரும் நேரம் நெருங்கி விட்டது

பெயரில்லா சொன்னது…

கரும்புக்கு பேர்போன ஊர் பழமைவாய்ந்த சிவன் ஸ்தலங்கள் சுற்றி இருக்கும் ஊர் ஆகாய நாதர், பூலோகநாதர், கைலாசநாதர் மற்றும் திருகண்டேஸ்வரர் , இவர்கள் ஊரின் அகத்தே இருக்க புறத்தே இன்னும் தெய்வ ஸ்தலங்கள் அதிகம் உள்ள ஊர்...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் பிரபா//
இது பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்..

செல்வா சொன்னது…

//பனிப்பாறை போலிங்கு உள்ளம் உருகுதே
கானலான உன் வரவை தினம் தேடுதே
என்னுள்ளே மறைந்திருக்கும் நங்கை நீயோ - என்னை
அறியாமல் அலைய வைக்கும் மாயை ஏனோ ?//

எல்லோருக்குமே இந்த எதிர்பார்ப்பு இருக்கு அண்ணா .!

karthikkumar சொன்னது…

சீக்கிரமே செல்லக்கிளி வருவாங்க :)

Unknown சொன்னது…

nice... :)

கவலை வேண்டாம்.. சீக்கிரமா வருவாங்க..

arasan சொன்னது…

கலக்கல் வரிகள் ....

ஹேமா சொன்னது…

செல்லக்கிளி...வார்த்தையே கவிதைபோல !

Unknown சொன்னது…

//பனிப்பாறை
பச்சைப்பிள்ளை
காத்தவராயனாய் //
உங்க செல்லக்கிளியை வர்ணித்த வரிகளைவிட உங்களை கொஞ்சம் அதிகமா வர்ணிச்சீட்டீங்க, நல்லா இருக்குங்க..

Unknown சொன்னது…

//2011 தீபாவளி தலை தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள்//
ஆர்.கே.சதீஷ் குமார் சொன்னா அது நிச்சயம் பலிக்குங்க.

Unknown சொன்னது…

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

கிளியா... தங்களை கிழிக்காமல் விட்டால் சரி.. ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

Meena சொன்னது…

கவிதை சூப்பர்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி