செவ்வாய், 25 நவம்பர், 2014

என்னதான் நான் செய்வது ? இயற்கை...!


கொட்டி கொடுத்தாலும் கோணலென்றான் என்னையே
                  கட்டிக் கொடுத்தாலும் கானலென்றான் உண்மையே
என்னதான் நான்செய்ய நாடெங்கும் பஞ்சமாம்
                  தன்னைதான் திட்டினான்வா னம்பார்க்கும் பூமியே
என்னைப்பார் ஏலனமாய் ஏர்க்களப்பை காலமாய்
                   சன்னிதியின் மூளையிலே சார்த்திவைத்த கோணமே
கொண்டதெல்லாம் கொட்டிவைக்க கோவணத் தாண்டி,யான்
                   கண்டதெல்லாம் பூட்டிதைத்த கோலம்தான் கொண்டவன்

கொட்டும் மழையெட்டி கோட்டைக்குள் கோலமிட
                  சொட்டும் மேனியெங்கும் சோலைசுனை போலே
தட்டிதட்டி பார்த்தே தனக்குமென ஆர்ப்பரிப்பில்
                  குட்டிகுட்டி  கள்ளம் குடைக்குள் அமர்ந்தஉன்னில்
வஞ்சனையை வார்பாக்கி  வாகைசூட வேதினம்
                   பஞ்சனையை தேடி பவணிவரும்  பாதகனாய்
நெஞ்சினிலும் மிச்சமில்லை நாடெங்கும் தத்தளிக்க
                   தஞ்சமெனும் வாக்குமெல்ல தங்கிகொண்ட துள்ளே

கொடுத்தவனும் போண்டி கொணர்ந்தவனும் ஆண்டி
                  எடுத்தவனை தாண்டி எழுந்தவன் கொண்டானே 
கோடுமென தென்றகோரிக் கையைதாண்டி கோளமே
                  தோடுடைதாரி தோகை தொலைவில் விரித்தானே
கட்டிடத்தை கொண்டுவின் மேகம் தொடுவானா
                 கிட்டிடும் தண்ணீரை கொட்டிடும் கோரநிலை
எட்டிட என்னையேன் ஏச்சுதிந்த மேனியெல்லாம்
                 பட்டிட பாவசுமை ஏறிதெல்லாம் என் மேனியாம்


இப்படி அப்படி பேசிபேசி கொல்லுறான்
               எப்படி பாருங்களேன் சொற்ப்படி வாசல்
சுகப்படி தேடல் அதில்இடையே மோதல்
               அகப்படி ஏனோ அவனவன் வாழ்வதில்லை
வீனோ வியப்பதும் தானோ புலம்பலில்
               நீனோ நிறைப்பதும் மேலே குறைப்பதும்
என்றானாய் இன்னிலை காலம் கழிப்பது
               வென்றாலும் இல்லை விடியட்டும் என்றாகும்......



4 கருத்துகள்:

arasan சொன்னது…

நம்மவர்களின் சுமையை சொல்லி மாளாது .. விளிம்பு நிலையிலிருக்கும் விவசாயம் எப்போது புத்துணர்ச்சி பெறுமென்று தெரியவில்லை ... எல்லாமும் மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது கிராமங்களிலும் ...

கவிதை பற்றி சொல்ல வேண்டுமா ? எப்போதும் போல அட்டகாசம் அண்ணே

KILLERGEE Devakottai சொன்னது…


இன்றைய அவலத்தை நன்றகவே தோலுறித்து விட்டீர்கள் அருமை நண்பரே,,,

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய அவல நிலை வரிகளில்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விவசாயத்தின் இன்றைய நிலையை சிறப்பாக சொன்னது கவிதை! அருமை!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி