சிக்கி தவித்தேனே சுக்கும் திணித்தேனே
சொக்கி கவிழ்ந்தேனே திக்கும் மறந்தேனே
வக்கில் இழந்தேனே மக்கும் உடல்தானே
சக்கை பிரிந்தென்ன சுள்ளியாய் மாற்றி
அஞ்சிட வேண்டாம் அரளியை அள்ளியேன்
கொஞ்சிட வேண்டும் கழனி(யை)யே கற்பகத்தேர்
கஞ்சி கடந்தருவார் காலத்தை கோளத்தில்
மிஞ்சி உடன்வருவார் இன்னும் உலகிலே
அல்லியே ஆற்றும் அகமெல்லாம் கடந்ததை
சொல்லியே சாற்று சிலையணிய மாலையை
கல்லில் கடைந்தவன் காதல் கலந்துலாவ
நல்லினமாய் தேற்றிடும் நாதம் அறிவாய்
எள்ளிலே எண்ணம் எழுத்தெழ தன்னையும்
அள்ளியே கண்ணம் கழுத்திணை உள்ளதை
கொள்ளுவாய் மெல்ல கடவுவான் வண்ணமே
அள்ளுவாய் எண்ணம் புயலென கல்லும்
அற்றதும் ஆடியென் அர்த்தப்படி ஆகுக
உற்றதும் ஊரும் உரியதென ஆகுக
கற்றததன் நாளும் கடத்துவன் ஆகுக
பெற்றதன் பாக்யம் நடந்துவன் தாங்குக....
2 கருத்துகள்:
படித்தேனே,,,, செந்தேனாய் இனித்ததே,,,, அருமை நண்பரே,,,
எனது புதிய பதிவு காண,,,
ஆஹா... அருமையான தேன்...
மிஞ்சி உடன் வருவார் இன்னும் உலகினிலே...
இனிய கவிதை தினேஷ்...
கருத்துரையிடுக