வியாழன், 27 நவம்பர், 2014

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை  நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை  போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.  தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கவிதை போட்டி:

  1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
  2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
  3. 20  வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
  4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல்,  தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
  5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
  6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.

கட்டுரைப் போட்டி:

  1. காமராசரை முதலமைச்சராக பெறாத தமிழ்நாடு…
  2. என் வாழ்வில் பெண் என்பவள். . .
  3. உலகியலில் தமிழர் நாகரீகம் ஓங்கியது எங்ஙனம்..?
  4. எனது பார்வையில் தொல்காப்பிய தமிழ்…
  5. உலகக்கலைகளும், பாரதக் கலைகளும்.(ஓர் ஒப்பீடு)
  6. தமிழகத்தில் அகத்தியலில் ஆணும், புறத்தியலில் பெண்ணும்.
  7. போபர்ஸ் முதல் அலைக்கற்றை வரை
விதிமுறைகள்: 3 முதல் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தமிழ்க்குடில் வழங்கிய தலைப்புகள் அல்லாது தங்களுக்கு விருப்பமான தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.

சிறப்பு கட்டுரைப்போட்டி – பெண்களுக்கு மட்டும்

*** பெண்கள் மட்டும் பங்குகொள்ள வேண்டும்.***
தமிழ்க்குடில் வழங்கியிருக்கும் தலைப்புகளில் தங்கள் சிந்தனையில் 3 பக்கங்களுக்குக் குறையாது கட்டுரை வடித்து அனுப்பவும்.

  1. தாய்மை
  2. பெண்மை
  3. நான் படைக்க விரும்பும் சமூகம்
  4. உயிரியல் பரிணாமத்தில் பெண்பாலினத்தின் பங்கு.
  5. வயல் வெளியிலிருந்து வான்வெளி நோக்கி..(பெண்கள்)
  6. பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் - காதலன், கணவன், மகன்…?
  7. பாரதி தேடிய புதுமைப்பெண்ணாய் நான்
குறிப்பு: கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள் தமிழ்க்குடிலின் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று கட்டுரைப்போட்டி:

தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தொடர்புடைய தமிழனின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகமெங்கும் அறியச்செய்யும்  எண்ணத்தில் இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு புதிய முயற்சி.

தாங்கள் வாழும் பகுதி அல்லது தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய அரிய தகவல்கள், அடையாளச்சின்னங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை இணைத்து புகைப்படத்துடன் கூடிய கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

சங்ககாலம், மூவேந்தர் காலம் மற்றும் அதற்குப்பின்னான காலங்களில் செவிவழிச்செய்தி, கதைகள் மற்றும் வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகள் சார்ந்த, ஏதேனும் ஒரு களத்தை எடுத்துக்கொண்டு இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை அதற்கான சான்றுகளுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கியக்குறிப்பு: தாங்கள் திரட்டியனுப்புகிற தகவல்கள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்ட தகவலாகவோ, இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவலாகவோ இருக்கும்பட்சத்தில் பரிசுக்கு தகுதியற்றதாக கருதப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

      படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 05.12.14  
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும் 

போட்டியின் முடிவு பாரதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும்.

பரிசு விவரங்கள்:
  1. 1.   வரலாற்று கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:               ரூ.3000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்                             
மூன்றாவது பரிசு:        தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

பரிசுத்தொகை என்பதை உங்கள் உழைப்பிற்கான எங்களுடைய சிறு அன்பளிப்பாக மட்டுமே கருதவேண்டுகிறோம்.  தங்களுடைய உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் முன்னால் இந்த பரிசுத்தொகை ஈடாகாது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆயினும், மறைந்துகிடக்கும் நம் வரலாறுகள் நம் மக்களிடையே சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்திலும், அக்கரையிலும் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். இந்த முயற்சியில் உங்கள் அனைவரது முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே நம் வரலாறுகளை மீட்டெடுக்கமுடியும்  என்கிற நம்பிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். நம் சமூகத்திற்கு நாம் செய்கிற சேவை என்கிற தார்மீக பொறுப்பின் அடிப்படையில்
வரலாற்று ஆய்வாளர்களும், வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.

  1. 2.   கவிதைப்போட்டி:

முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு          
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
  1. 3.   கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                   
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

  1. 4.   பெண்கள் சிறப்புக்கட்டுரை
முதல் பரிசு:          ரூ.1500/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                  
                    மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

போட்டி சிறக்க வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…


எமது வாழ்த்துகளும்,,,,

'பரிவை' சே.குமார் சொன்னது…

போட்டி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி