வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

புதையாளும் சரீரமே


மண்மேடு எங்கும் கலவரம் தாங்கும்
மாறும் நிலை ஏனோ ? காருண்யம்
போற்றும் மானிடா,- குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?

மன்னவனாளும் குற்றம் எதுவோ..?
மக்களைத் தாக்கும் குண்டுகள் ஏனோ?
உயரே பறக்க சிறகுகள் உண்டோ..?!
சாதிய வெறியனே...

மனிதம் மனிதம் நிமித்தம் மரணம்
புகழ்க் கொண்டுக் கூடி நிற்பர்
மாளும் உடலில் பங்கெடுப்பாரோ
புதையாளும் சரீரமே.?

கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் ..............................

22 கருத்துகள்:

Unknown சொன்னது…

வந்தாச்சு...

Unknown சொன்னது…

நல்ல கவிதை.

ஆர்வா சொன்னது…

தினேஷ் என்ன இது.. செம டெரரா இருக்கு...

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதை அருமை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பஹ்ரைனில் நடப்பதை சொல்லி எழுதிய கவிதை ஒரு சாட்டை அடி அவர்களின் இந்த வெறிக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதுல பாதிக்க படுறது நாமா அவனுகளா....

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Nice Lyrics....

Unknown சொன்னது…

கலவரம் பூக்கும் மண்மேட்டில்
அமைதிப்பூ சிரிப்பது எந்நாளோ...

குங்கும சிவப்பு குருதித்துளிகளின்
சுகம் காண்பது நிறுத்தப்படுவது எந்நாளோ..

மனிதத்தை மறந்து விட்டு,
மரணத்தை நேசிக்கும் சாதி வெறியனே...
மறந்து விடாதே....
நீ வைத்திருப்பது
என்றோ ஒரு நாள் மண்ணுக்குள்
புதைந்து போகும் சரீரம் என்பதை...

இப்படிக்கு...
தினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்
எழுதி பேர் வாங்குவோர் சங்கம்.

Ram சொன்னது…

அருமை நண்பரே.!!

சமீபகாலமாக மாறுபட்ட தினேஷை காண்கிறேன்..

அருமையாக அமைத்துள்ளீர்...

@பாரத்.. பாரதி: உங்கள் விளக்கத்தில் தினேஷின் கோபம் மறைகிறது.. மற்றும் அதன் வேகத்தை உடைத்து ரசனையில் எழுதியதுபோல் உள்ளது..

Chitra சொன்னது…

காருண்யம்
போற்றும் மானிடா,- குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?

....வேதனையான அவல நிலை.

மோகன்ஜி சொன்னது…

புதிய சொற்கள்.. பழைய வேதனை.

ருத்ரன் சொன்னது…

.....புதையாளும் சரீரமே.... உண்மையான வரிகள் கொண்ட கவிதை...

எஸ்.கே சொன்னது…

அருமை நண்பரே!

Unknown சொன்னது…

வலியுடன் நீ.........குருதி எனும்....நீர் கண்ணோடு நான்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் .....

என்ன தினேஷ் ரொம்ப கோபமா இருக்கீங்க போல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

..

>>>
Blogger பாரத்... பாரதி... said...



இப்படிக்கு...
தினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்
எழுதி பேர் வாங்குவோர் சங்கம்.

வர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு

ராஜகோபால் சொன்னது…

//குங்கும சிரிப்பில் குருதிக் குளியளேன்?//

துயரங்கள் கண்முன் தெரிகிறது

ஹேமா சொன்னது…

மனிதம் மறந்த மனிதர்கள் நிறைந்துவிட்ட உலகமாச்சு தினேஸ் !

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை..

Unknown சொன்னது…

//வர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு//


தினேஷ் நம்ம சகோ தானுங்க... கோபிக்க மாட்டார்...

சிவகுமாரன் சொன்னது…

மனிதம் நிமித்தம் மரணம்.
எண்ணற்ற கேள்விகளைக் கிளப்பும் வரி

செல்வா சொன்னது…

//குங்கும
சிரிப்பில் குருதிக் குளியளேன்?
/

அதுதான் ஏன்னு தெரியல .. ஓட்டுப் போடும்போது பார்த்து போடணும் ..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி