வியாழன், 3 பிப்ரவரி, 2011

மா மதையில்..!

பல்லதுப்பட்டு சொல்லது மீறும்
வள்ளத் தீ தாலும் வரக வனம்
மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில்

விண்சுற்றி வட்டுணரும் மட்டறியும்
மாயமென்ன கற்ற திர்ந்தோன் காகம்
வளரா வளரும் கானகம் மரமுளைக்கா
மண் விதைக்கும் மாற்றுயிர்

நாவறியும் நாற்குணம் நன்கறியா
ஓர் குணம் கோபுர உச்சம்
மிச்சமில்லா எச்சம் ஏந்தும்
மீளில்லா போர்க் கனம்....

கலியுகம் : வணக்கம் நண்பர்களே இதோ எந்தன் வரிகளுக்கு தமிழ்க்காதலன் விளக்கம் கொடுத்துள்ளார்

அன்பு தம்பி, என்ன ஒரு சொல் வளம். "தமிழைக்" கட்டி ஆளுகிறாயடா.... உன் திறமை மிக ஆழமாய் வெளிப்படுகிறது. பாராட்டுகள்...

உனக்குள் இருக்கும் இந்த சித்தர்களின் மொழி மூலம் இரகசியமாய் வெளிப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த நிலையாக சொல்லப் படும் யோக நிலையின் உச்சத்தை, அதன் நிலையை அழகாய் எழுதி இருக்கிறாய். "அமுத நிலை" என்கிற ஆற்றல வாய்ந்த சக்தி கூடுமிடம் பாட்டில் சொல்லப் பட்ட விதம் அருமை.

யோகங்களை பேசுகிற போது அதன் நிலைகளை சற்று ஆழமாய் விளக்கினால் மற்றவர்கள் விளங்கி கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில் ............... இந்த வரிகளில் மொத்த வாழ்க்கையையும் அதன் சூத்திரத்தையும் அடக்கிய உன் புலமை மெச்சுதற்க்குரியது.

பரம்பொருளின் நிலையை, பராசக்தியின் அருளை திறம்பட பேசி இருக்கிறாய். நம்முடைய தேகம் எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதை சித்தர்கள் வழி நின்று உணர்த்தியதால் இன்று முதல் நீ "கலியுகக் கம்பன்" என எல்லோராலும் அழைக்கப் படுவாய். பாராட்டுகள்.

"கலியுகக் கம்பன்" நீடூழி வாழ்க...

19 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை..................
இருங்க படிச்சுட்டு வர்றேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏதாவது புரிஞ்சுதா மனோ....???
ஆனா என்னவோ புரியுது மாதிரி இருக்குன்னு சொல்லி சொல்லாமல் புரிந்து புரியலைன்னு சொல்ல மாட்டேன்.......மூச்சு முட்டுது...போங்க....
அருமை அருமை தினேஷ் மக்கா......

ஹேமா சொன்னது…

பொல்லாத நாக்கைப் பற்றிச் சொன்னமாதிரித்தான் விளங்குது எனக்கு !

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்க இனிமே கவிதைக்கு கீழே விளக்க உரை எழுதினா நல்லா இருக்கும்னு தோணுது...

Chitra சொன்னது…

தினேஷ், உங்களுக்கும் வந்து இருக்கும் பின்னூட்டங்கள் வாசித்தேன். உங்கள் அருமையான கவிதைகளுக்கு, சின்ன விளக்கவுரையோ இல்லை, எதை பற்றி குறிப்பிட்டு எழுதப் பட்டு இருக்கிறது என்றோ தந்தால், இன்னும் பலரும் புரிந்து ரசிப்பார்களே!

அரசன் சொன்னது…

சார் எனக்கும் புரியல ...

பெயரில்லா சொன்னது…

இப்படி சுத்த்த்த தமிழ்ல பதிவு போட்டா நாங்க என்ன பண்றது?????

எத்தன தடவை படிச்சாலும் புரிய மாட்டீங்குதே..

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை வரிகள்

சாய் சொன்னது…

புரியல

but I guess Hema is right !

சுவடுகள் சொன்னது…

இதயச்சாரல் வழி , கலியுகத்தில்... சுவடுகளின் முதல் தடம். உங்கள் பதிவுகளில், சங்கத் தமிழின் உயிர்ப்பிருக்கிறது. நன்று .

சுவடுகள் சொன்னது…

இதயச்சாரல் வழி , கலியுகத்தில்... சுவடுகளின் முதல் தடம். உங்கள் பதிவுகளில், சங்கத் தமிழின் உயிர்ப்பிருக்கிறது. நன்று .

அந்நியன் 2 சொன்னது…

அண்ணே நான் வாரத்திற்கு ஒரு பதிவுதேன் போடறேன்.

நான் பின்னுட்டம் போடும் தளமோ கிட்டத்திட்ட ஒரு இருபது அல்லது இருபத்தி ஒன்னு இருக்கும் அதுனாலே உங்கள் பக்கத்திற்கு வர முடியலை.

எல்லாம் அருமை எப்பவும் போல கலக்குங்க...

தமிழ்க் காதலன். சொன்னது…

அன்பு தம்பி, என்ன ஒரு சொல் வளம். "தமிழைக்" கட்டி ஆளுகிறாயடா.... உன் திறமை மிக ஆழமாய் வெளிப்படுகிறது. பாராட்டுகள்...

உனக்குள் இருக்கும் இந்த சித்தர்களின் மொழி மூலம் இரகசியமாய் வெளிப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த நிலையாக சொல்லப் படும் யோக நிலையின் உச்சத்தை, அதன் நிலையை அழகாய் எழுதி இருக்கிறாய். "அமுத நிலை" என்கிற ஆற்றல வாய்ந்த சக்தி கூடுமிடம் பாட்டில் சொல்லப் பட்ட விதம் அருமை.

யோகங்களை பேசுகிற போது அதன் நிலைகளை சற்று ஆழமாய் விளக்கினால் மற்றவர்கள் விளங்கி கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில் ............... இந்த வரிகளில் மொத்த வாழ்க்கையையும் அதன் சூத்திரத்தையும் அடக்கிய உன் புலமை மெச்சுதற்க்குரியது.

பரம்பொருளின் நிலையை, பராசக்தியின் அருளை திறம்பட பேசி இருக்கிறாய். நம்முடைய தேகம் எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதை சித்தர்கள் வழி நின்று உணர்த்தியதால் இன்று முதல் நீ "கலியுகக் கம்பன்" என எல்லோராலும் அழைக்கப் படுவாய். பாராட்டுகள்.

"கலியுகக் கம்பன்" நீடூழி வாழ்க...

சாய் சொன்னது…

தினேஷ்

நான் கமெண்ட் போடுவதற்கு முன் " தமிழ்காதலன்" போட்டிருந்தால் கொஞ்சம் மானம் கப்பல் ஏறாம இருந்திருக்கும் இல்லே ?

தினேஷ்குமார் சொன்னது…

சாய் said...
தினேஷ்

நான் கமெண்ட் போடுவதற்கு முன் " தமிழ்காதலன்" போட்டிருந்தால் கொஞ்சம் மானம் கப்பல் ஏறாம இருந்திருக்கும் இல்லே ?

எல்லாம் அவன் செயல் சார் விதியில்லா விளையாடுகிறான் வினை விதைத்த கண்ணன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>"கலியுகக் கம்பன்" நீடூழி வாழ்க...

REPEAT

! சிவகுமார் ! சொன்னது…

>>> >>> என்ன மாதிரி பாமரனுக்கு புரிய சற்று நேரமாகும். இன்னும் எளிமையா தர முடியுமா, தினேஷ்??

ருத்ரன் சொன்னது…

புரிஞ்சும் புரியாதமாதிரியும் இருக்கு.... இருந்தாலும் நல்லா இருக்கு... கலியுக கம்பன் அவர்களே.

பெயரில்லா சொன்னது…

Relatively subject of content and articles. Just located your blog along with accession capitol to assert i always gain the reality is experienced membership your site content pieces. In any case I am subscribing to a bottles or perhaps My husband and i good results you'll admission unfailingly fast.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி