வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தலைப்பே யானின்று


கோடிகளில் விருப்பமில்லாதவன்
சனக் கோடியில் ஒருத்தனம்மா
எந்தன் உயிர்ப்பு நீ என்றே
உள்ளவன் வாசிக்கிறான்

தடைகற்கள் பலவென்றறிந்தும்
தடை மீறி நினையே யாசிக்கிறான்
சுவாசிக்கிறான் எனது சுவாசமே
நீ தான் என...

இதுவரைக் கண்டதில்லை உனையான்
காணா துடிக்குதம்மா என்னுயிர் - காலன்
அழைப்பினும் உனைக் காணாது எனை
ஆட்கொள்ள அதிகாரமற்றவனவன்


13 கருத்துகள்:

கவிதை காதலன் சொன்னது…

நல்ல உணர்ச்சி வெளிப்பாடு

//பலவென்றரிந்தும்//

எழுத்துப்பிழை இருக்கிறதோ?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

good feelings....

VELU.G சொன்னது…

// இதுவரைக் கண்டதில்லை உனையான்//

ஒருதலைக் காதலா?

Speed Master சொன்னது…

நல்லாருக்கு

தம்பி கூர்மதியன் சொன்னது…

யாரை(எதை) நினைத்து எழுதியது.???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சரி சரி எல்லாம் சீக்கிரம் ரெடி ஆகிரும் கவலை படாதேயும்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஓட்ட வட நாராயணன் said...
good feelings....//

ஓமகுச்சி சொன்ன மாதிரியே சொல்றாரு'பா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தம்பி கூர்மதியன் said...
யாரை(எதை) நினைத்து எழுதியது.???//

நாளை உமக்கு இருக்கு வெள்ளாவி....என் பிளாக்குல...

தம்பி கூர்மதியன் சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ said...
//தம்பி கூர்மதியன் said...
யாரை(எதை) நினைத்து எழுதியது.???//

நாளை உமக்கு இருக்கு வெள்ளாவி....என் பிளாக்குல...//

இதுக்குதானே கம்முனு இருந்தன்.!! நம்ம மனோவ பத்தி நமக்கு தெரியாதா.. என்ன வாரமாட்டீங்கன்னு எனக்கு தெரியாதா.!!!

Chitra சொன்னது…

மென்மையான காதலின் உணர்வுகள், கவிதையில் தெரிகிறது.

Philosophy Prabhakaran சொன்னது…

ஒண்ணுமே புரியல அண்ணே... வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு கிளம்புறேன்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்னைக்கு ஏமாற மாட்டேன் கைல கோனார் நோட்ஸ் வெச்சிருக்கேன்.. ஹி ஹி

vanathy சொன்னது…

well written! super.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி