சனி, 20 நவம்பர், 2010

தரண் வெல்ல..................


கருவேலம் முற்களில்
கால் பதிந்த கோலம்
சலனப்படும் சருகுகள்
சாடை சொல்லி கேளேன்

பசியோடு பயனிக்க
மரவள்ளி பசி தீர்க்க
துணைக்கொண்டு
தான் நடக்க

மறைகின்ற கதிரவனும்
மாலை பொழுதென்ருரைக்க
இமை கூடே அழைக்க
இளைப்பாற இடம்தேடி
சூழ்ந்ததங்கு இருளும்

நிலவொளியும் காணோம்
நீண்டதொரு நொடி பொழுது
விடிகையிலே கண்விழிக்க
தலைவிருட்சம் ஆலமர
மடியில் தான் கிடக்க

ஆயிரம் கதை சொல்லி
தலை இருக்க ஆடாதே
தரண் வெல்லதானிருக்கு
தான் வெல்ல திணிக்காதே
குரல் உயர கேட்டிற்று
இமை விழிக்கையிலே.............

9 கருத்துகள்:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

புரியல.... விளக்கம் ????...

கொஞ்சம் எளிமையா எழுதுங்க சாமி..
நாங்கெல்லாம் தற்குறிங்க..

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃநிலவொளியும் காணோம்
நீண்டதொரு நொடி பொழுது
விடிகையிலே கண்விழிக்க
தலைவிருட்சம் ஆலமர
மடியில் தான் கிடக்கஃஃஃஃஃஃ

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

வினோ சொன்னது…

அருமை அருமை தினேஷ்...

santhanakrishnan சொன்னது…

தங்களின் மொழி
வசீகரிக்கிறது தினேஷ்.

karthikkumar சொன்னது…

இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதுனீங்கன்னா என்னை போன்றோருக்கும் புரியும் பங்கு

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை ஆழ்ந்து படிக்க வைத்தாலும் நல்லா வந்திருக்கு.

Unknown சொன்னது…

இப்ப கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்குது....

தமிழ்க்காதலன் சொன்னது…

நல்ல கவிதை நண்பா.., உங்களின் சிந்தனை சிறகடிக்கிறது. அடர்ந்த நினைவுகளை கிளறுகிறது.
திருத்தம்.... "இலைப்பரா" என்பது "இளைப்பாற" என வந்தால் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி