ஞாயிறு, 14 நவம்பர், 2010

"வருவாயோ என்னவளே"


காகித வரியாக நான்
ஒரு நாள்
நீ வாசிப்பாய் என்று

தென்றலோடு
என் சுவாசம் வீச
என்றாவது
நீ சுவாசிப்பாய் என்று

கற்பனையில் கரைகின்ற
நொடிபொழுதும்
முகம்தெரியா
உனை ஏக்கங்களால்
தாக்கி வர்ணிக்கிறது

சத்திரத்தில்
உறங்கையிலும்
நித்திரையும் தோற்கிறது
உனை கண்டிராத
காதல் அலையில்

சித்திரமும்
சிரிக்கிறது
உறங்கா விழிகளும்
சொப்பனத்தில்
உனை தேடும்போது

எத்திக்கும் காணவில்லை
உன் கால்தடங்கள்
என் பாதையிலே
இனியேனும்
தடம் பதிக்க
என் இனியவளே

உணர்வாய் உருகுகிறேன்
உருபெற்று உயிர்பெற்று
வருவாயோ
என்னவளே
வெகுவிரைவில்
என் கண்ணெதிரே.....

சம்மதமில்லா
நிம்மதி வெல்லும்
இனிமையுடன்
தினம் தினம்
உனைத்தேடி
ஒரு பயணம்
வருவாயோ என்னவளே......




24 கருத்துகள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமையான கவிதை தோழா.., நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

எல் கே சொன்னது…

urukkamaai irukkirathu,, :)

ஹரிஸ் Harish சொன்னது…

கவித..கவித..

ஆமினா சொன்னது…

நெஞ்சை தொட்ட உணர்வு பூர்வமான கவிதை!

வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////காகித வரியாக நான்
ஒரு நாள்
நீ வாசிப்பாய் என்று///

அருமை! நம்பிக்கையே வாழ்வு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////தென்றலோடு என் சுவாசம் வீச என்றாவது நீ சுவாசிப்பாய் என்று
கற்பனையில் கரைகின்றநொடிபொழுதும்முகம்தெரியா///

ஏக்கத்தை பிரதிபலிக்கும் வரிகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உருக்கமான உணர்வுகளை எதிரொலிக்கிறது கவிதை வரிகள்!

Philosophy Prabhakaran சொன்னது…

Followers Widgetஐ பக்கவாட்டில் வைக்காமல் மேலே வைத்திருக்கிறீர்கள்... அது எப்படியென்று எனக்கு சொல்லித்தர முடியுமா...?

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே...

சிவராம்குமார் சொன்னது…

அருமையான வரிகள் நண்பா!

அருண் பிரசாத் சொன்னது…

நல்லாவே இருக்குங்க கவிதை

ஹேமா சொன்னது…

முதல் வரிகளே மனதைத் தொட முழுதுமாய் நிரம்புகிறது !

ஆர்வா சொன்னது…

ஒரு அருமையான் ஃபீல் இருந்தது...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு இன்சிடெண்ட் கவிஞா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>>முகம்தெரியா
யுனை ஏக்கங்களால்
தாக்கி வர்ணிக்கிறது>>>


யுனை வரியின் தொடக்கத்தில் வராது.உனை என மாற்றவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>சொப்பணத்தில்
உனை தேடும்போது???

சொப்பனத்தில் என்பதே சரி

சுசி சொன்னது…

சீக்கிரமே வருவாங்க :))

நல்லா இருக்குங்க.

vimalanperali சொன்னது…

மனதை பகிர்ந்து கொள்ளுகிற ந்ல்ல கவிதை.

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal
polurdhayanithi

Unknown சொன்னது…

சமூகத்தின் பக்கமும் உங்கள் கவிதைப்பார்வையை திருப்புங்கள் தம்பி ...

Unknown சொன்னது…

வந்தாச்சா இல்லையா?

Unknown சொன்னது…

அடுத்து ஒரு சமூக கவிதையை எதிர்பாக்கலாமா?

Unknown சொன்னது…

//காகித வரியாக நான்ஒரு நாள் நீ வாசிப்பாய் என்று
தென்றலோடு என் சுவாசம் வீச என்றாவது நீ சுவாசிப்பாய் என்று//

ஏக்கம், ஏக்கம்..

Unknown சொன்னது…

நிம்மதியில்லா
இனிமையுடன்
தினம் தினம்
உனைத்தேடி
ஒரு பயணம்
வருவாயோ என்னவளே

ethirparpukal niraintha varikal

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி