சனி, 27 நவம்பர், 2010

எறும்புகளாய் நாம் இன்று ..........



அதிகாலை இருளினிலே
விடியலை வரவேற்க்க
பசுவின் சானத்தெளிப்புடன்
வாசல் மொழுகி
நெடுங்கோடு வலைப்பின்ன
கரங்கோர்க்கும் மாக்கோல
அன்னதானம் மங்கையரின்
கைவண்ணத்திலே


இருள் விதைத்த
விடியல் விழிக்க
நெடுநீள வரிசையிலே
மாக்கோல துகள்
சுமந்து மழைக்கால
உணவாக சேமிக்க
துவங்கும் எறும்பு

உதிரும் உணவுகளும்
சேமிப்பில் அடங்கும்
மாக்கோலம் தேடி
தொடுவானம் கூடே
நெடுந்தூரப் பயணம்
சீரான நேர்வழியில்
தொடர்கின்ற பயணம்
செயற்கையான
மாக்கோலம்..........

ஐந்தாண்டு ஆட்டத்திலே
அவ்வளவும் சுரண்டியாச்சு
இனி சுரண்டுவதற்கு
ஏதுமில்லை மக்கள்
உயிர் மட்டும்தான்
பாக்கி இங்கு
அடுத்தவன் தான்
சுரண்டட்டுமே
விட்டுகொடுக்க
மனமில்லையே
மறுமுறை
வாக்களிக்கும்
கரங்களிலே
சலவை நோட்டு
மட்டும் பேசும்
கால்பங்கும்
குறையாது
சுரண்டிசேர்த்த
சொத்தினிலே
பல தலைமுறை
தாங்கும் வம்சத்தையே..........

பறிகொடுத்த சேமிப்பும்
சவமான சொந்தங்களும்
கிடைக்காமல்
தினம் தேடும்
எறும்புகளாய் நாம்
இன்று ..........

டிஸ்கி : நம்மகிட்ட சலவை நோட்டெல்லாம் கிடையாது விருப்பம் உள்ளோர் வாக்களிக்கலாம்,

டிஸ்கி 1 : யார் மனசையும் புன்படுத்தனும்னு இந்த பதிவை எழுதவில்லை மனசுல பட்டுச்சு படார்னு எழுதிட்டேன் அப்படி புண்பட்டால் நான் போருப்பில்லைங்கோ நீங்களே பொறுப்பு

டிஸ்கி 2 : எறும்பை துருப்பாக உபயோகித்ததற்க்கு எறும்பிடம் மன்னிப்பு கேட்கிறேன் தருவாயா, படங்கள் கூகிள்ல சுட்டது படமும் கதைச்சொல்லும்

23 கருத்துகள்:

எல் கே சொன்னது…

எறும்புக் கவிதை நல்லா இருக்கு தினேஷ். எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃஐந்தாண்டு ஆட்டத்திலே
அவ்வளவும் சுரண்டியாச்சுஃஃஃஃ

அத்தனை வரிகளிலும் இந்த வரிக்கு தான் கனம் அதிகம்...

Chitra சொன்னது…

படங்களும் கவிதையும், மனதை கனக்க செய்கின்றன.

Unknown சொன்னது…

எல்லாக் கவிதைகளுமே சிறப்பு ..

Unknown சொன்னது…

//நம்மகிட்ட சலவை நோட்டெல்லாம் கிடையாது விருப்பம் உள்ளோர் வாக்களிக்கலாம்,//
அட அட...

Unknown சொன்னது…

கவிதைகள் அருமை... தொடரட்டும்.

Unknown சொன்னது…

வாக்களித்து விட்டேன்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நீளமா இருக்கே?ஆனாலும் நல்லாதான் இருக்கு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

படங்கள் கவிதைக்கு ஏற்றாற்போல் தூள்

ஆமினா சொன்னது…

என்ன சொல்ல வறீங்க என்பதை படங்களே சொல்லிவிட்டது!!

வரிகள் அருமை!

வாழ்த்துக்கள்

தமிழ்க்காதலன் சொன்னது…

நண்பா... நம் எல்லாருடைய ஆதங்கமும் ஒன்றாகவே இருக்கிறது. நம்முடைய நிலையை மாற்ற நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கு வழி கண்டு பிடிப்போம். தேசம் புனிதப் பட ......

'பரிவை' சே.குமார் சொன்னது…

படங்கள் கவிதைக்கு ஏற்றாற்போல் தூள்...

எஸ்.கே சொன்னது…

அருமையான எறும்புக் கவிதை!

அன்பரசன் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதைகள் அருமையாக இருக்கின்றன... படங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன... மற்றவர்கள் மனது பாதிக்கப்படும் அளவிற்கு இதில் எதுவுமே இல்லையே...

santhanakrishnan சொன்னது…

எல்லாக் கவிதைகளும் மிக நன்று.
கவிதையின் நோக்கம் பாதிக்க வேண்டும் என்பதுதான்.
இதில் தவறொன்றுமில்லை
தினேஷ்.

Cable சங்கர் சொன்னது…

//பறிகொடுத்த சேமிப்பும்
சவமான சொந்தங்களும்
கிடைக்காமல்
தினம் தேடும்
எறும்புகளாய் நாம்
இன்று ........./

இது நல்லாருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான எறும்புக் கவிதை!

karthikkumar சொன்னது…

அருமை பங்கு

Thoduvanam சொன்னது…

தொடுவானம்,நெடும் தூரம் எனக்கு ரொம்ப பிடிச்சது ..

priyamudanprabu சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

lovely great submit. Many thanks for publishing

பெயரில்லா சொன்னது…

Thnx a huge amount of because of this! We haven’t recently been this kind of delighted by a write-up a long time! You have got the following, just about any that means on blogging. Definitely, You'll be definitely moat people that have anything at all to state that that people will need to notice. Continue your marvelous duty. Continue on helpful people!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி