வெள்ளி, 26 நவம்பர், 2010

துணிவோமா இனியேனும்...........


சலனமில்லா மனது
சாக்கடையில் விழும்
சாதிக்க நினைத்து
துணிந்து தூர்வார பழகு

சிந்திக்க நினைக்காது
சீர்கெட்டு அலைகிறாயே
சிரிக்க மறந்த உலகை
சீர் திருத்த பழகு

சுயம் உன்னில்
சூட்ச்சிகள் செய்வதால்
சுட்டெரித்து
சூட்ச்சிகள் வெல்ல பழகு

செருப்பாக மாறினாயோ
சேற்றில் கால் பதித்து
தொண்டன் எனும் பெயரில்
சாக்கடையில் கொடிபிடிக்க

மக்களுக்கு தொண்டு செய்ய
சாக்கடைகளை சாலவம்
அமைத்து கழிவை
வெளியேற்ற உறுதியளி

உனக்கும் தொண்டனாவான்
ஒருவன் அவனையும்
வழிநடத்து அரசியல்
சாக்கடையை தூர்வார

புதிய தொண்டனாக
தோள்கொடுப்போம்
சீருடை காவலரும்
தோள்கோர்ப்பர் துணிவோமா
இனியாவது .........

15 கருத்துகள்:

KANA VARO சொன்னது…

நல்ல கவிதை...

Unknown சொன்னது…

அரசியல் எனக்கு வேப்பங்காய் ....

Philosophy Prabhakaran சொன்னது…

// அரசியல் எனக்கு வேப்பங்காய் .... //
இங்கேயும் அதேதான்...

karthikkumar சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க பங்கு.

karthikkumar சொன்னது…

ரொம்பவே ரசிச்சேன்

சுசி சொன்னது…

தமிழனின் உணர்வு.

வினோ சொன்னது…

நல்லா இருக்குங்க தினேஷ்...

Chitra சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra சொன்னது…

உனக்கும் தொண்டனாவான்
ஒருவன் அவனையும்
வழிநடத்து அரசியல்
சாக்கடையை தூர்வார


..... motivating

vimalanperali சொன்னது…

நல்ல கவிதை,இன்னும் ஆழம் இருந்தால் தேவலாம்.

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்! கவிதையை இன்னமும் செதுக்கி,எழுத்துப் பிழைகள் நீக்கி வெளியிடலாமே.. அவசரத்தில் எழுதி பதிவிட்டது போலும். ரொம்பவே என் தம்பியிடம் எதிர்பார்ப்பதால் தான் இந்த ஆதங்கம்..சாதிக்கப் பிறந்தவன் நீயல்லவா?

santhanakrishnan சொன்னது…

துனிவல்ல அது துணிவு.

vanathy சொன்னது…

அருமை!

தமிழ்க்காதலன் சொன்னது…

மிக உணர்வுப் பூர்வமான கவிதை. உணர்ச்சித் தெரிப்புகள் ஆழமாய்....அழகாய். இன்னும் நிறைவேறாத இலட்சியங்களை சுமந்தபடி நாளைகளை எதிர்ப் பார்க்கும் நம் தேசம்..... அவசியம் "தூர்வாரப்பட்டாக வேண்டும்". வாருங்கள் தோழா...
கை கோர்ப்போம். குப்பைகளை வெளியே போட்டு தீயிட்டுக் கொளுத்துவோம். படித்த தலைவர்கள்... பண்பாளர்கள் தலைவராக வாய்ப்பளிப்போம். தேசம் விழிக்க வேண்டிய தருணம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறோம். விற்பதற்க்குள் விழிக்கா விட்டால்.... நாளைய நம் தலைமுறை "அடிமை இந்தியாவின் குடிமகனாய்"..................

பெயரில்லா சொன்னது…

Great complete thoughts on this site.I’d prefer to highly recommend a brief look at that include something similar to cheeseburger. Whatrrrs your opinion?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி