வெள்ளி, 12 நவம்பர், 2010

நீராட்டும் காட்டருவி




ஒய்யாரமாய் பாடிவரும்
காட்டருவி கண்சிவக்க

கரைகின்ற கார்மேகக்
காதலுனைத் தாக்க

தடைபடும் தடுப்புகளை
தகர்த்திடுமுன் கோபம்

மறவாதே மழைத்துளியே
நீ மாற்றிவரும் இயற்கையை

நீராட்டி வரம்தருவாய்
காட்டருவி நீயே

விளை பயிர்
வீழ்வில்லாமால்
விளைந்து செழிக்க
கரம் தொழுவோம்
உனை கருத்தில்கொள்
தாய் மண்ணை.......


12 கருத்துகள்:

எல் கே சொன்னது…

nalla muyarchi dinesh

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்லா இருக்கு சார்

அந்நியன் 2 சொன்னது…

மறவாதே மழைத்துளியே
நீ மாற்றிவரும் இயற்கையை
நீராட்டி வரம்தருவாய்
காட்டருவி நீயே

விளை பயிர்
வீழ்வில்லாமால்
விளைந்து செழிக்க
கரம் தொழுவோம்
உனை கருத்தில்கொள்
தாய் மண்ணை.......

உங்களின் ஏக்கம் புரிகிறது கவிதை எழுத தெரிஞ்ச நீங்கள் விவாசாயிகளின் கண்ணீர்த் துளியை காவியமாக படைத்துள்ளிர்.

இதையே மனுவாக எழுதி மந்திரியிடம் கொடுத்தால் மணிக் கணக்கில் படிப்பார் ஏன் என்றால் அவர் படித்தப் படிப்பிற்கு இது என்னனே தெரியாது.
இன்று கவிதைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த விவசாய நிலம் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான்,பிறகு அது ரியல் எஸ்ட்டேட் என்னும் இட ஆக்கிரமுப்பு பேர்வளிகளால் அந்த இடம் வீட்டெடமாக மாறிவிடும், பிறகு மழை எதற்கு? அருவி எதற்கு?

பசுமையை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்து வரும் பெரும் முதலைகள் இதில் கொள்ளை லாபம் அடைகிறார்கள்,விவசாய நிலங்கள் எல்லாம் fபிளாட் போட்டு விற்கப் படுகின்றது இந்தியா இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்துதான் நூறு சதவிகத உணவுப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வரும்.

அந்நியன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///மறவாதே மழைத்துளியே
நீ மாற்றிவரும் இயற்கையை////

இதுதான் ஹைலைட்!

ஆமினா சொன்னது…

அழகான வரிகள்! வாழ்த்துக்கள்....

//இந்தியா இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்துதான் நூறு சதவிகத உணவுப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வரும்.//
கண்டிப்பாக.. பல நாடுகளில் விவசாயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முக்கியத்தொழிலாக கொண்ட இந்தியா கண்டுக்கொள்ளாமலே விட்டுவிடுகிறது. இப்படியே போனால் அந்நியன் சொல்வது போல் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை :(

Unknown சொன்னது…

கவியருவி...

Philosophy Prabhakaran சொன்னது…

@ பாரத்... பாரதி...
// கவியருவி... //
செம பின்னூட்டம்...

செல்வா சொன்னது…

கவிதை உண்மைலேயே நல்லா இருக்குங்க ..!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதையும் ஸ்டில்ஸ்சும் சூப்பர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அழகான வரிகள்.வாழ்த்துக்கள்....

ஹரிஸ் Harish சொன்னது…

அருமை..தொடருங்கள்..

DREAMER சொன்னது…

காட்டருவியின் சீற்றம், உங்கள் கவிதையில் கண்டேன்..! அருமை..!

-
DREAMER

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி