திங்கள், 8 நவம்பர், 2010

மாதங்களில் காதலி



ஏட்டில் ஏறிய
என் முதற்கனவு
காட்டருவி
நனைந்திருந்த
மழைதருணமாய்
மாதங்களில் காதலி
மனமெல்லாம்
சிறகுகள் படபடக்க
தீரா மகிழ்வில்
சமர்பிக்கும் என்
என் பணிவான
வணக்கங்கள்..................

மகளிர் சிறப்பு (லேடீஸ் ஸ்பெஷல்) தீபாவளி மலரில்
மாதங்களில் காதலி என்ற தலைப்பில் ஏட்டில் அரங்கேறிய என் கவிதை
சித்திரை நிலவாக
நின் முகம் காண?

வைகாசி திங்களில்
உதித்தவளோ நீ

ஆனி அடிதார்ப் போல்
நெஞ்சில் பதிந்தாய்

ஆடி யின் பிம்பமாக
நள்ளிரவில் நீ

ஆவணி யில் வீசிய
நின் தாவணிக் காற்று

புரட்டாசி திங்களில்
உதித்த நிலவு

ஐப்பசி தீபவொளியில்
புன்னகை பூத்தது

கார்த்திகை அகலொளியில்
தேவதையாய் நீ

மார்கழி பூக்கள்
மலர வெட்கப்பட்டன

தை பிறந்தும் நின்
விழி வழி மறிக்க

மாசி மகமாக
மனமெல்லாம் கடலலைகள்

பங்குனி உத்திரத்தன்று
நித்திரையில் கண்ட கனவானேன்


என்னை ஊக்குவித்த இயற்கைக்கு முதல் வணக்கம்
அன்பு அக்கா தேனம்மை லட்சுமணன் அவர்கட்க்கும்
அன்பு அக்கா சித்ரா சாலமன் அவர்கட்க்கும்
பதிவிட்ட மகளிர் சிறப்பு (லேடீஸ் ஸ்பெஷல்) தீபாவளி மலர் ஆசிரியர் அவர்கட்க்கும் பணிவான என் வணக்கங்கள்


தாய் தந்தையை வணங்கி ஆசிபெற்று
தங்களின் ஆசி பெற காத்துநிற்கும்

தம்பி
தினேஷ் குமார்

18 கருத்துகள்:

Chitra சொன்னது…

நீங்கள் எழுதிய கவிதைகளில், இது முதல் இடத்தை பிடிக்கிறது. அத்தனை அழகு!
இன்ட்லியில் இணைக்கவில்லையா?
நன்றி எதுக்குங்க? உங்கள் படைப்புகள் இன்னும் பல பத்திரிகையில் வர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

எஸ்.கே சொன்னது…

மிக மிக அழகான கவிதை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கலக்கல் நண்பா.....! வாழ்த்துக்கள்..! என்ன மேட்டருன்னு முன்னாடியே சொல்லப்படாதா?

சாய்ராம் கோபாலன் சொன்னது…

Wow Dinesh.

அழகான கவிதை.

சிவராம்குமார் சொன்னது…

அழகான கவிதை!!!

அன்பரசன் சொன்னது…

கவிதை சூப்பர்.

ஹேமா சொன்னது…

தினேஸ் அன்பான வாழ்த்துகள்.
வரிசைப்படுத்தி கவிதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.இன்னும் இன்னும் தொடர்ந்து எழுத
என் அன்பு வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

super thalaiva, ungal kavithai nachunu eruku,all the best,

பத்மா சொன்னது…

வாழ்த்துகள்.

congrats

Unknown சொன்னது…

//ஏட்டில் ஏறிய

என் முதற்கனவு//
/
இன்னும் இன்னும் தொடர்ந்து எழுத
வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்சிடெண்ட் கவிஞா ,வாழ்த்துக்கள்.உங்கள் குணத்துக்கும் திறமைக்கும் நீங்கள் இன்னும் உச்சியை தொடுவீர்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நன்றி மறவா நல்ல குணம்,பொறுமை,கவிதையை உடனுக்குடன் வெளிப்படுத்தும் உங்கள் ஆற்றல் என்னை பிரம்மிக்க வைக்கிறது

மோகன்ஜி சொன்னது…

நன்று ! தினேஷ்!மேலும் மேலும் அச்சேற அச்சாரமாய் அமைந்திருக்கிறது இந்தக் கவிதை வாழ்த்துக்கள்..

தினேஷ்குமார் சொன்னது…

வாழ்துக்கூறிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை சமர்பித்து தங்களை வணங்கி தொடர்கிறேன் வரிகளின் பாதையை

விஷாலி சொன்னது…

அழகான கவிதை.

வாழ்த்துக்கள் நண்பரே

நிலாமதி சொன்னது…

மேலும் பல் படைப்புகள் தந்து பிரபலம் அடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு கவிதை எழுத திறமை இருக்கிறது .
மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ்.. இன்னும் பல சிறந்த படைப்புக்கள் படைக்க வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

I appreciated nearly as much as you might are given implemented what follows. That page design is going to be stylish, any authored content cool. even so, most people command line acquire gained the anxiousness more than that you just need get offering you this. sick without any doubt occur more aforetime known as once again like an identical virtually frequently on the inside of event one protection this specific multiply.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி