சனி, 6 நவம்பர், 2010

உயிர் மட்டும் பேசுதடி...............

கடுகும் கனக்குதடி-நின்
கார விழி பார்வையிலே

கரும்பும் கசக்குதடி-நின்னை
காணாத நாழிகையில்

குரும்மிளகு இனிக்குதடி-நின்
மீளாப் புன்னகையில்

குயில் கூவ மறந்ததடி-வின்
வியக்க குரல் கேட்க்க

வலியும் சுகம் சுமக்குதடி-நீ
வரும் கடைகால நினைவினிலே

உடல் கிழிந்த கோலமடி-என்
உயிர் மட்டும் பேசுதடி

எமன் அழைக்கும் நேரமடி-நீ
எங்கிருக்காய் என்னவளே

சதி செய்த சாதிவெறி-என்
உடல் ருசித்து பசிதீர்த்ததடி

எவன் படைத்த சாதியடி-தினம்
குருதி சுவைக்க போகுதடி

மதிவெல்லும் உலகமடி-இனி
மாறவேண்டும் சாதிவெறி

களங்கமில்லா காதலடி-என்
உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி..........................................................................

12 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

//உடல் மட்டும் மரணித்து
உயிர் மட்டும் பேசுதடி//
Nice lines!
Another good work from you!

மதுரை சரவணன் சொன்னது…

எவன் படைத்த சாதியடி-தினம்
குருதி சுவைக்க போகுதடி
//


ஆமாம். அருமை..வாழ்த்துக்கள்

சிவராம்குமார் சொன்னது…

சாதியின் மீது சாட்டையை சுழட்டி இருக்கிறீர்கள்... அருமை!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மதிவெல்லும் உலகமடி-இனி
மாறவேண்டும் சாதிவெறி


iwdha இந்த லைன் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இண்ட்லியில் இணைக்க;லையா?

சுசி சொன்னது…

நல்லாருக்குங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///எமன் அழைக்கும் நேரமடி-நீஎங்கிருக்காய் என்னவளே///

விளக்கமுடியாத உணர்வு!

DREAMER சொன்னது…

உங்களது உயிர் பேச்சு காதலிலும் சாதிப்பிரச்சனை உள்ளதை சாடியபடி உரக்க சொல்லியுள்ளது..! அருமை..!

-
DREAMER

Ramesh சொன்னது…

//எமன் அழைக்கும் நேரமடி-நீ
எங்கிருக்காய் என்னவளே

பயங்கரமா இருக்குங்க.. அசத்திட்டீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நண்பரே.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html

Unknown சொன்னது…

தமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

Hi there.This valuable publish got teaching, certainly since i contain has been in need of trying to find renders this specific idea continue Friday.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி