அறுசுவை அதிரசம்
சுவைக்க......
அதிகாலையில்
நல்லெண்ணெய்
குளியளிட்டு
நோம்பெடுக்கும்
பாத்திரத்தில் பலகாரம்
பல வைத்து கூடே
வாழை பன்னிரெண்டும்
பூஜை சாமான்களுடன்
நோம்பு கலசம் இருக்கும்
கோவில்தனில் குடும்பத்துடன்
சென்று பூஜையிட்டு.....
நடுவீட்டில் தலைவாழை
இலை விரித்து
பச்சை பலகாரம்
அடுக்கி வைத்து
புதுதுணிகள் கூடே
மற்றொரு படையலும்
போட்டு தந்தை
நோம்பு கயிறுதனை
எங்கள் கரம்தனில் அணிய
தொடங்கும் தீபவொளி
சரவெடி சகிதமாய்
முதல் வெடி
என்னில் மூத்தவர்
வைக்க தொடர்
நாட்டு வெடி
நான் வைக்க அதிரும்
சாலைகளில்
புகை மூட்டம் கூட
அம்மாவின் குரல்கேட்டு
உள்ளே செல்ல இருவரும்
சகோதரி வீட்டுக்கு
பலகாரம் கொண்டு
சென்று சகோதரியின்
பிள்ளைகளை இங்கே
அழைத்து வந்து
ஆசையாய் அம்மா
அரவணைக்க பொடிசுகளை
சற்று பொறாமைதான்
அம்மா பாசத்திற்கு
பாசவலையில் பகிர்ந்து
உண்ணுவோம் பலவீட்டு
பலகாரங்களை.........
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய தீபவொளி நல்வாழ்த்துக்கள்..............
அன்புடன்
தம்பி தினேஷ்
11 கருத்துகள்:
தீபாவளி .... தீபாவளி..... தீபாவளி...... ஒன்றையும் விட்டு வைக்காமல், கலக்கி இருக்கீங்க!
உங்களுக்கும், எங்களது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ரொம்ப அருமை..!!
தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய திபாவளி நல் வாழ்த்துக்கள் அன்பரே...
தீபாவளி வாழ்துக்கள் நண்பா...!
எல்லாமே சூப்பரா இருக்கு. எனக்கு அதிரசம் இல்லையா?
தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் தினேஷ்! படமும் கவிதையும் அதிரசம்!
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா!
happy Dipavali
உங்களுக்கும், எங்களது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் :))
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி வாழ்த்துக்கள்.
ஆமா அதென்ன அறுசுவை அதிரசம்? அதிரசம் இனிப்புதானே.
சகாதேவன்
கருத்துரையிடுக