வெள்ளி, 19 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 3


ஒத்தையடி பாதை
சத்தம் சருகுகள்தான்
சுத்தம் செய்தாலும்
நித்தம் உதிரும்
சருகுகள் மண்ணிற்கு
எருவாகும்

சத்தம் போடாமல்
நித்தம் எழும் எண்ணம்
சுயநலம் காக்க
சூறையாடும் நம்மை
நித்தம் ஒரு பாதையிலே
எத்தனிக்கும் இன்றும்

நாளை ஒருநாள்
நம்மில் இல்லையெனில்
என் செய்வாயோ
மானிடா............................

13 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

//சுத்தம் செய்தாலும்
நித்தம் உதிரும்
சருகுகள் மண்ணிற்கு
எருவாகும்//

சுழற்ச்சி முறை வாழ்க்கை.

சூப்பர்.

வினோ சொன்னது…

/ சத்தம் போடாமல்
நித்தம் எழும் எண்ணம்
சுயநலம் காக்க
சூறையாடும் நம்மை
நித்தம் ஒரு பாதையிலே
எத்தனிக்கும் இன்றும் /

உண்மை தாங்க தினேஷ்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்க்கை கவிதையாய்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நாளை ஒருநாள்
நம்மில் இல்லையெனில்
என் செய்வாயோ
மானிடா.........................../////

சிந்திக்க வேண்டிய கேள்வி!

தமிழ்க்காதலன் சொன்னது…

இந்த நிலையை மனித சமூகம் எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வாழ்வியலின் சங்கிலி அறுந்து வெகு காலமாகிறது நண்பா..., ஓட்டை விழுந்த படகில் ஏறி... மனித இனம் பயணிக்கிறது..... மூழ்கும் காலம் வரை...

எஸ்.கே சொன்னது…

நாளை ஒருநாள்
நம்மில் இல்லையெனில்
என் செய்வாயோ
மானிடா//
நாளை என்ற ஒன்று இல்லையென்றால் யோசித்தாலே பயங்கரமாக இருக்கிறது!!!

Unknown சொன்னது…

இது காட்சிகள் மாறும் காலத்தின் கோலம்..

karthikkumar சொன்னது…

நாளை ஒருநாள்
நம்மில் இல்லையெனில்
என் செய்வாயோ
மானிடா..///
????? நன்று

karthikkumar சொன்னது…

இதே நடையை தொடருங்கள் பங்கு

Unknown சொன்னது…

நித்தம் , சுத்தம் என வார்த்தைகளின் விளையாட்டு...
தொடரட்டும் ஆட்டம்....

ஹேமா சொன்னது…

நல்ல கேள்வியோடதான் நிப்பாட்டியிருக்கீங்க !

DREAMER சொன்னது…

கருத்துக்களோடு சேர்ந்து, எதுகை மோனையெல்லாம் விளையாடுது உங்க கவிதையில்...! வாழ்த்துக்கள் நண்பரே..!

-
DREAMER

vanathy சொன்னது…

super & well written.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி