புதன், 17 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 2 முத்தம் தீட்டிய திட்டம்


முத்தமொன்று கொடடா
செல்லம் உனக்கு
மிட்டாய் வாங்கிதாறேன்
இன்னுமொன்று கொடடா
உன் விருப்பம் வாங்கிதாறேன்

எதிர்பார்ப்புகள் இல்லா
மனது எதிர்ப்பார்க்க
தூண்டியதோ உனை
முத்ததிற்க்கு கிட்டிய
மிட்டாய் சத்தமில்லாமல்
சங்கதி சொல்லியதோ
உன்னிடம்

கடைத்தெரு போகவும்
காய்கறிகள் வாங்கவும்
தன்கடமையை செய்யவும்
படித்து பட்டம் பெறவும்
கையூட்டு பெற்றவரிடமே
முத்தத்திற்க்கு கிடைத்த
மிட்டாய் உன்னை
இன்னும் எத்தனை
திட்டங்கள்
தீட்ட வைத்தனவோ

இதுவரை பிரதிபலன்
எதிர்பாராமலிருந்த
சில பிஞ்சு மனதின்
எண்ணங்களை
புரட்டிபோடுகிறது
முத்தத்திற்கு கிடைத்த
மிட்டாய்...................

டிஸ்கி: முதலில் என்னை மன்னிக்கவும் சகோதர சகோதரிகளே பாசத்தில் இருந்துதான் உருவெடுக்கிறது கையூட்டும் ஊழலும் என்று வரிகளை கோர்த்துள்ளேன் தவறுதான் என்னை மன்னிக்கவும் எனினும் சிறு உண்மை சிறு நெஞ்சின் எதிர்பார்ப்பு என்பது கையூட்டாக மாறுவதாக என் உள்ளம் கூறியதால்
தங்கள் பார்வைக்கு

டிஸ்கி 1: தவறிருந்தால் தயங்காமல் தண்டிக்கலாம் தங்களை வணங்கி சிரம் தாழ்கிறேன்

21 கருத்துகள்:

அந்நியன் 2 சொன்னது…

கவிதையை எப்படி வர்ணிக்கனும்னு தெரியலை அண்ணே,முதலில் நாட்டமையாக இருந்து, ஜாலியா ஏதாவது கிருக்கிட்டுப் போவேன் இப்போ அந்நியன் கெட்டப்பில் இருக்கிறதுனாலே ஒன்னும் சொல்ல முடியவில்லை.
குற்றம் போன்ற பதிவாக்கங்களுக்கு மட்டுமே கொஞ்ச விரிவா எழுதுகிறேன் உங்கள் கவிதை படிப்பதற்கு அருமையா இருக்கு, நாட்டின் நேசனாகிய நீங்கள் என்றுமே ஹீரோதான்.

வாழ்த்துக்கள் !

தமிழ்க்காதலன் சொன்னது…

வணக்கம் தோழா.., இந்த கவிதையின் கரு ஆழமானது. சமூகம் எங்கே அடிப்படை தவறை நிகழ்த்துகிறது என்பதை தெளிவாய் சொல்லி விட்டீர்கள். நாடு திருந்துமா பார்ப்போம்....? அருமையான பதிவு.

நிலாமதி சொன்னது…

இதுவரை பிரதிபலன்
எதிர்பாராமலிருந்த
சில பிஞ்சு மனதின்
எண்ணங்களை
புரட்டிபோடுகிறது
முத்தத்திற்கு கிடைத்த
மிட்டா...........

அருமையான பதிவு

நிலாமதி சொன்னது…

இதுவரை பிரதிபலன்
எதிர்பாராமலிருந்த
சில பிஞ்சு மனதின்
எண்ணங்களை
புரட்டிபோடுகிறது
முத்தத்திற்கு கிடைத்த
மிட்டா...........

அருமையான பதிவு

வினோ சொன்னது…

அருமையான கவிதை தினேஷ்... நலம் தானே?

ஹேமா சொன்னது…

ஆழமாக யோசித்தால் தவறில்லை தினேஸ்.உண்மைதான்.
சிந்திக்கவேண்டிய கவிதை !

Philosophy Prabhakaran சொன்னது…

டிஸ்கி டச்சிங்...

எஸ்.கே சொன்னது…

உண்மை இதுபோல் அழுகையாலும் குழந்தைக்கு சலுகை கிடைப்பதால் குழந்தைகள் சிலசமயம் தவறான பாடங்களை கற்றுக்கொள்கின்றன!

பெயரில்லா சொன்னது…

முத்தத்திற்கு கிடைத்த
மிட்டாய்//
சூப்பரான வரிகள் தவறில்லை டிஸ்கி தேவையில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

good

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தினேஷ்,இதுவரை பதிவிட்ட கவிதைகளில் நான் படித்தவற்றில் இதுதான் டாப்.சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எடிட் பண்ணீ ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் 4 இடத்தில் இருக்கு ,சரி பண்ணவும் யுன்னை யுனை என இருப்பதை எல்லாம் உன்னை ,உனை என மாற்றவும்

ஆர்வா சொன்னது…

கவிதையைவிட டிஸ்கியில கலக்கிட்டீங்க போங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///இதுவரை பிரதிபலன்

எதிர்பாராமலிருந்த
சில பிஞ்சு மனதின்
எண்ணங்களை
புரட்டிபோடுகிறது
முத்தத்திற்கு கிடைத்த
மிட்டாய்////

வாவ்... அருமையான கருத்தை எவ்ளோ எளிமையா சொல்லிட்டீங்க..
உண்மை தாங்க.. பகிர்வுக்கு நன்றி.. :-))

ஆமினா சொன்னது…

ஆழகருத்துக்கள் உள்ள கவிதை வரிகள்!

வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கவிதை அருமை.........வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

அழகிய கவிதை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான கவிதை, சிந்திக்க வைக்கும் கருத்துகள், பொதுவாகப் பரிசளிப்பது தவறு இல்லை என்றே எண்ணுகிறேன். அதே நேரத்தில் தவறு செய்வதற்குப் பரிசு கொடுப்பது தவறு!

karthikkumar சொன்னது…

தவறென்று எதுவும் தோன்றவில்லையே. நம் நாட்டில் இன்று கையூட்டுத்தான் அதிகமாகி விட்டது. டிஸ்கி அவசியம் இல்லாத ஒன்று

Unknown சொன்னது…

ஐந்தில் தவறாய் வளைத்துவிட்டால், பிறகு எப்போது தான் சரி செய்யமுடியும்..
அருமையான கவிதை..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி