செவ்வாய், 16 நவம்பர், 2010

அறுவடைக்கு வாரீரா??? 1


தலைசாயும் நெற்கதிரை
நெடுந்தூரம் தேடியலைய
புல்தரையும் பளிங்காக
வீழ்ந்ததொரு மழைத்துளி
தலைசிதறி தவறியல்ல

வாய்க்காலும் குளக்கரையும்
புற்புதறாய் மாறிநிற்க்க
தற்செயலாய் முளைத்ததொரு
ஊழல் பயிரால்
உருக்குலைந்து உருமாறி
உசர்ந்த கட்டிடமாய்
காட்சிதர மழைதுளியும்
யோசிக்க நாம்
விளைவித்த பயிரல்லவே


கடல்கலக்கும்
ஆற்று நீரும்
இடையிடையே
தேங்கி நிற்க்க
கடல் சேர வழியுமில்லா
அணைதடுப்பு மாறியிங்கு
மணல் கொல்லைப்போன
குழிகளிலே கண்ணீர்விட
குட்டையாக தேங்கி நின்று
உப்புநீராய் மாறியதுவே

அறுவடை செய்யா
ஊழல் பயிர் பறிக்கும்
உயிர்கள் இங்கு ஏராளம்
அறுவடைக்காலமோ
கானல்நீராய்
உரம்போட்டு வளர்ப்போரோ
பணம் தின்னும் பிணமாக
பிணம் தின்னி
பறவைகளும்
பணம் தின்வதில்லை
பணம் தின்னாலும்
உயிர் பிழைக்குமா
இவர்கள் பிணம்.............

அறுவடை செய்யா
ஊழல் பயிரோன்ரை
அறுவடை செய்யவாரீரா??

டிஸ்கி: அறுவடைக்கு வருவோர் வாக்களிக்கவும்



13 கருத்துகள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

அழகு.. அழகு... அருமை தோழா.. உங்களின் ஆவேசம் என்னிலிருந்து கிளம்பிய சந்தோசம் எனக்கு. இந்த தேசம் அந்த அறுவடைக்கு காத்திறுக்கிறது. விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

நிலாமதி சொன்னது…

அறுவடைககு காத்து இருக்கிறோம். கவிதை அழகாய் சொல்லபட்டு இருக்கிறது .படங்களும் இணைந்த்து மேலும் அழகு

santhanakrishnan சொன்னது…

எரிதழல் ஏந்தியிருக்கிறீர்கள்.
எரிந்து சாம்பலாகட்டும்.

NaSo சொன்னது…

மச்சி தொடருங்க உன் கவிதை தாகத்தை..

karthikkumar சொன்னது…

நல்லா இருக்கு சார். சாரி பாஸ்

மனோ சாமிநாதன் சொன்னது…

"பிணம் தின்னி
பறவைகளும்
பணம் தின்வதில்லை
பணம் தின்னாலும்
உயிர் பிழைக்குமா
இவர்கள் பிணம்............."

அருமையான வரிகள்! நல்ல கவிதை! தொடர்ந்து எழுதுங்கள்!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

//பிணம் தின்னி
பறவைகளும்
பணம் தின்வதில்லை
பணம் தின்னாலும்
உயிர் பிழைக்குமா
இவர்கள் பிணம்.............//

arumaiyana varigal.

Unknown சொன்னது…

//பிணம் தின்னி
பறவைகளும்
பணம் தின்வதில்லை
பணம் தின்னாலும்
உயிர் பிழைக்குமா
இவர்கள் பிணம்.........//

அறுவடை அருமை..'
கவிதைக்கனல் தொடரட்டும்...

Unknown சொன்னது…

//அறுவடைக்கு வருவோர் வாக்களிக்கவும்//

done...
எங்கள் "வாக்கு" என்றும் மாறாது..

ஹேமா சொன்னது…

தேவையான கோபம்தான் தினேஸ் !

Unknown சொன்னது…

நல்ல கவிதைப்பார்வை.. சில பிழைகள் இருக்கின்றன, இன்னும் சுருக்கமாகவும் சொல்ல முயலுங்கள்...ஒருமுறை எழுதிவிட்டு இரண்டுநாள் கழித்து மீண்டும் திருத்தி பதிவிடுங்கள்.. அற்புதமான மொழிவளம் இருக்கிறது.. இன்னும் கூர் செய்தால் பேசப்படுவீர்கள்...

ருத்ரன் சொன்னது…

அருமையான வரிகள்டா தினேஷ், தொடரட்டும் உன் கவிதைகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சூப்பர் நண்பா, வெகு அருமையான கருத்துக்கள், செந்தில் அண்ணன் சொன்னதுபோல், இன்னும் கொஞ்சம் சுருக்கமாக எழுதலாம். வெல் டன்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி