திங்கள், 27 அக்டோபர், 2014

உள்ளது அறி...!


ஆண்டு பலவாகி போகினும் ஆண்டவன்
தானாகி ஆள அகிலத்தின் கோணம்
அளவின்றி நீளும் அகிலாண்ட நாயகன்
வாழ்ந்தெழில் கூடே குயவனும் உள்ளே

தாழ்ந்தென்ன ஆகுவ வீழ்ந்தெங்கு நீங்குவ
வாழ்வென்ற தேரிலே போரென்றும் நீளுமே
பாழ்கொள்ள வேண்டா அகழ்வாய் நிகழ்வை
அருள் திறளும் அகமே உனதாய்

மகிழ்வெங்கும் காணாய் பழியெங்கும் வீனாய்
கழிவெங்கும் நீக்கு இழிவங்கு மாயும்
மரங்கொத்தி தானே மனங்கொத்த பாராய்
மதியாகி போவன் மயமுந்தன் உள்ளே

தீராது கொள்ளும் தியானத்தே நில்லும்
தனியேத் தனை வெல்லும் நிலையே
வலிமை யதுவென ஓதும் அகநிலைக்கல்
ஆட்ட முடிவதும் உள்ளென அறி...

உள்ளில் அவனாக உள்ளது அறி
உள்ளில் இயக்கமே உள்ளது அறி
உள்ளில் உயிராக உள்ளது அறி
உள்ளில் எதுவுமாக உள்ளது அறி

2 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

என் சிற்றறிவுக்கு பல விசயங்கள் புரியவில்லை. இதில் நான் " உள்ளது அறிவது" எப்படி ?
நன்றி

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் சிவகுமாரன் அவர்களே...

ஆள்வது தான்தான் (நீங்களே தான்) என்ற கோணத்தில் நிகழ்வை கூர்ந்து செயலுடுத்தி பாருங்களேன் ...

வருகைக்கு மிக்க நன்றி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி