வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடந்தது யோகம்...!


காட்சிகள் மாற கடந்தது யோகம்
அதிலொரு வீழ்வு அவனிடம் தேர்வு
கரைந்ததும் காலக் கழிவினில் ஏடு
படித்துரை பாக்ய பிறப்பிடமோ

அலைந்து திரிந்து அமரும் தருவாய்
கருவின் உதயம் தெளிந்த மனமாய்
மயங்கி மருகிய நேரம் படிந்தது 
கண்கள் திறந்தும் இருண்டது மாயை

மனம் லயித்து மயமாகி போக
தினம் புதிதாய் உதித்த மலர்கள்
நலம் விசாரிக்க புன்னகை பூத்த
பெரு மௌனத்தின் சங்கதி

அவிழ தொடங்கி அமிழ்ந்து மணந்தது
தன்னை தனிமையில் காண கவர்ந்தது
மெய்யே மெழுகாய் உருகிடும் தவமே
உடை தரித்தயென் உள்ளம் திறந்ததே

கதவுகள் காற்றிசைக்க திக்கு திறந்தது
பேதை பிதற்றிய பாவை உருவிலே
மேகப் பொழிவினை தேக்கி நிறுத்திட
வாதம் பிழையென்ற கோணம் சரியானது....


2 கருத்துகள்:

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

என் வலைத்தளத்தில் உங்கள் வருகை கண்டு
இங்கு வந்தேன். மிக்க நன்றி!

இங்கும் உங்கள் நல்ல கவிப் படைப்புகளைக் காண்கிறேன்!இன்றைய கவியும் அருமை!

யோகங் கடந்ததென யோசித்தே இட்டகவி
வேகமாய்க் கண்டேன் விரைந்து!

வாழ்த்துக்கள்!

-'பரிவை' சே.குமார் சொன்னது…

அவிழ தொடங்கி அமிழ்ந்து மணந்தது
தன்னை தனிமையில் காண கவர்ந்தது
மெய்யே மெழுகாய் உருகிடும் தவமே
உடை தரித்தயென் உள்ளம் திறந்ததே...


கடந்தது யோகம்...
மனசுக்குள் கடக்காமல் கிடக்கிறது..
அருமை.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி