செவ்வாய், 28 அக்டோபர், 2014

உறங்குவான் உள்ளில்...!


உறங்குவா னுள்ளில் உயர்வெனும் மேய்ப்பன்
இறங்குவா னில்லை உணர்ந்துயிர்க் காவிடின்
தோற்றமினி வேடமிட தொற்றுமிழை கோலமிட
கற்றததும் மெய்ப்பிக்கும் பொய்யெந்தன் கூடே

நார்தரித்த வேடம் மலரடுக்க மாலையாகி
தாந்தரிக்க வேடம் கபடமாக பொய்த்திலா
கார்மேக மோகம் மழைபாடும் கானம்
கலையான லோகம் உடனிருப்ப கூடே

தேனிருக்கும் கூடு தனியே தவமிருக்க
ஆர்ப்பரித்து ஆடும் அலைகளும் தேடிடும்
தேவையவன் தேரோ நெகிழ்ந்து ஒழுகும்
அமுதோ அகமேறி காணாய்யுன் கூடே

அருகிலிரு ஆழ்வதறி ஆராய காரம்
பிடிபடும் கார்யம் விடுபடும் தோராய
தோரணம் கண்டு தொடுவாய் சுயமே
தொலைவெது காணுவாய் உள் கூடே

அழைத்தெழும் பாக்யம் பிழைத்துழும் வாக்கில்
தழைத்தெழும் தர்மம் விளைத்துழு கர்மம்
கடனோடு சேரும் கணமே சுடுகாட்டு
பித்தன் பிழைக்க புகுவானுள் கூடே

2 கருத்துகள்:

மனசு சொன்னது…

அருமை....
ரொம்ப சந்தோஷமா இருக்கு தினேஷின் வரிகளை கலியுகத்தில் பார்க்கும் போது...
மீண்டும் வலைக்குள் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமை..!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி