சனி, 19 மார்ச், 2011

"மெய் தழுவும் பொய் "



துருவமிருசேர பருவமழைக்கும்
மருவும் விரதத்து மறுத்த மது
சருகுமிலைத்தேட சன்னதி பாழ்
மானுட மேனியான் சரணம்

வேறுடல் தேடிய பயணத் துவக்கம்
மனமதில் மணந்த மாற்றிய வடு
சதிரலைத் தேடும் சகதியி லிழுக்கும்
சிதிலமடை சமர்ப்பணம்

மெய் யுரைத்தான் பொய் யுரைக்க
மெய் தழுவும் பொய் யொன்று
வினை யறுக்க நடந்தேறும் நனி
நாடக மினிதே தொடக்கம்....

கலியுகம் : அன்பு நண்பர்களுக்கு நான் தற்சமயம் ஊரில் இருப்பதால் பதிவுலகிற்கு சரியாக வரமுடிவதில்லை மன்னிக்கவும்...

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

உங்கள் திருமணத்திற்கு (அட்வான்ஸ்) இனிய நல்வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

//வேறுடல் தேடிய பயணத் துவக்கம் //


ஏன்..ஏன்...ஏன்?

Unknown சொன்னது…

என்ன தலைப்பு இது, பட்டினத்தார் ,மாதிரி...
கல்யாண காலத்துல, சந்தோஷமா, நல்லா தலைப்பா வைக்க வேண்டாமா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் வந்துட்டேனே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

கல்யாண மாப்பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு கவிதை....
சந்தோஷமா எழுதுங்க...

தமிழ்க்காதலன் சொன்னது…

உள்ளுக்கும், புறத்துக்கும் தனித்த இடைவெளியில் தன்னைத் தேடும் தம்பிக்கு, கவிதை பொருள் ஆழ்ந்து கிடக்கிறது. தம்பி வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.

Chitra சொன்னது…

சே.குமார் said...

கல்யாண மாப்பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு கவிதை....
சந்தோஷமா எழுதுங்க...


.. :-)

Meena சொன்னது…

அவ்வளவா புரியவில்லை . ஆனால் கவிதை இலக்கணம் நன்று

Kousalya Raj சொன்னது…

கவிதையின் பொருள் பிடிபட சிறிது நேரம் எடுத்தாலும், கவிதை நெகிழ செய்கிறது...

திருமண நிகழ்விற்கு பின் சந்தோஷ கவிதைகள் அணி வகுக்கும் என நினைக்கிறேன் !! :)))

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி