சனி, 9 ஏப்ரல், 2011

தமிழே என் தமிழே ..!


தமிழே என் தமிழே ..! அன்னை

உன்னை மூலமெனக்கொண்டு

முன்னுயர ஆசையின்றி தமிழ்

முதனெழவே ஈடாக வகுத்திருந்த

முன்னெழு பின்னெழு முற்றமிழை

தமிழ்க்கு தமிழ் மூலம்

அறிந்திட்டாய் உன் மூலம்

தமிழ் செழிக்க நீ தொகுத்திருக்கும்

தொகுப்பிலக்கம் முதல் இலக்கியம்

என் மூத்த தமிழுக்கு அறிதிருக்கும்

அவனியில் பிரிதிருக்கும் எங்கும்

துளிர் துளிர் துளிர்த்திருக்கும்

மண்ணில் தழைத்திருக்கும்

விண்ணுயர முளைத்திருக்கும்

கடுகளவு கற்றுள்ளேன் என்னுள்ளில்

என்னுள்ளிருந்து எனை திருத்து

எனையாளும் தமிழே தமிழ் செழிக்க

சரணடைகிறேன் உன்பாதமத்தில்

என்னில் மரணித்து மரணித்து

மீண்டு உயிர்பித்து உயிர்பித்து

தொடர்ந்துன்னை தொடர்வேன்

தமிழ் தொண்டாற்ற மண்ணில்

வழி நடத்து தமிழ்த் தாயே

உன் பாதமத்தில் வீழ்கிறேன்......


கலியுகம் : அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..... தமிழ் அன்னைக்காக மீண்டெழும் பதிவு

11 கருத்துகள்:

Speed Master சொன்னது…

வந்தேன் வாக்களித்து சென்றேன்


முடிஞ்சா பதில் சொல்லுங்க

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_09.html

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்......... மாப்பிள்ளை சார்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ் அருவி தமிழ் சொரூபி....
புத்தாண்டு வாழ்த்துகள் புது மாப்பிளை....

பாரத்... பாரதி... சொன்னது…

நல்ல கவிதை தந்து, கணிணியில் தமிழ் வளர்க்கும் உண்மைத்தமிழன் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... சொன்னது…

இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

தம்பி கூர்மதியன் சொன்னது…

புதிய ஆண்டுக்கும், புதிய வாழ்க்கைக்கும் வாழ்த்துகள் மாப்பிள்ளை சார்..

மோகன்ஜி சொன்னது…

மாப்பிள்ளை சார்! உங்களுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

இனிய மண வாழ்விற்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் தினேஷ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கல்யாணத்தன்னைக்கும் கவிதை எழுதுவீங்களோ..?

அப்பாவி தங்கமணி சொன்னது…

இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம் சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி