ஞாயிறு, 8 மே, 2011

தாயும் சேயும் கருவறையில் ...!


அகத்தே நீ உதைக்க
புறத்தே
காணாத பேரின்பம் உன்னை சுமக்கும்
ஒவ்வொரு துளியும் எனை வென்று
உன்னை மீட்பேன் என்கண்மணியே

இவைதான் உலகமென்று புறம் காண
மறுக்குதம்மா உள்ளம் அகத்தே-உன்
அரவணைப்பில் நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே

எனை மீட்கும் வேள்விதனில் வேதனை
பல அனுபவிப்பாயே என் தாயே
உன் வேதனையின் தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்

சோதனையும் வேதனையும் உன் முகம்காண
காற்றாக பறந்திடுமே கண்மணியே -நீ
ஆணாக பிறப்பாயோ பெண்ணாக பிறப்பாயோ
ஏக்கம் எங்கும் நிறைந்திருக்க

தூக்கமில்லா உன் நினைப்பில் காத்திருப்பேன்
பெண்மையிலே வளர்ந்தேனே உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா மாற்றமிலா உண்மையிது

எனைக்காக்கும் இன்னுயிரே உனைக்காப்பேன்
என்றுமிங்கு உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............

கலியுகம் : அன்புக்குரிய அனைவருக்கும் அன்னையர் தின வணக்கங்களுடன் இனிய மீள் வரிகளுடன் உங்கள் தினேஷ்

9 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

திருமண வாழ்த்துக்கள்.. நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

திருமண வாழ்த்துக்கள்..
அன்னையர் தின வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உறக்கம் தெளிஞ்சிடுச்சா மக்கா, ஆளையே காணோம்....

ADMIN சொன்னது…

அன்னையர் தினத்துக்கு மகுடம் வைத்தாற் போன்ற கவிதை.. ! வாழ்த்துக்கள்..! வளருங்கள்..!

///எனக்கு பிடித்த வரிகள்///

உயிரினுள் நுழைந்து ஒன்றிணைந்தது இவ்வரிகள்..

""எனைக்காக்கும் இன்னுயிரே உனைக்காப்பேன்
என்றுமிங்கு உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு.""

மனதை தொட்ட வரிகள்.. மயங்குகிறேன் இவ்வரிகளுக்கு..

மோகன்ஜி சொன்னது…

திருமண வாழ்த்துக்கள் தினேஷ்! உனக்கு ஒரு வருஷம் தான் டயம் தருவேன். நான் பெரியப்பா ஆக வேண்டி....
இறைவன் என்றும் உன்னுடன்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

எனை மீட்கும் வேள்விதனில் வேதனை
பல அனுபவிப்பாயே என் தாயே
உன் வேதனையின் தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்

அற்புதம்
கண்ணீரை கட்டுபடுத்த முடியாத , விரும்பாத
வார்த்தையில் நெய்த வரிகள்
வாஞ்சையான வந்தனம் உங்களுக்கு

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

தங்களுடைய வலைத்தளம், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://blogintamil.blogspot.in/2013/07/2_31.html

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

தங்களுடைய வலைத்தளம், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://blogintamil.blogspot.in/2013/07/2_31.html

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி