புதன், 29 செப்டம்பர், 2010

காதலை மறந்து

பருவ வயதது
பருவ மயில் - அவள்
பார்த்ததும் காதலல்ல
பயங்கர சண்டை
சண்டையிலும் அவள்
முகம் கண்டு
சாந்தம் அடைந்தேன்

வீச்சருவால்
வீச துணிந்த கைகள்
அவள் வாசம்
அறிந்ததோ என்ன

பேசும் கண்விழியில்
பாசம் படர்ந்தன
பட்டென விட்டேன்
கைபிடியை

தாழவிழுந்தது அருவாள்
மட்டுமல என் மனமும்தான்
அவள் பாசவிழிகளில்....

நெற்கதிர் தலை
தூக்க மண்ணின்
பாசம் கண்டு
தலை கவிழ்ந்தனவோ

கதிர் விருப்பத்தில்
தலை கொய்தனவோ
கதிர் அருவாக்கள்.........

நாடு கடத்தப்பட்டு
வீடு திரும்பினேன்
அம்மன் கரகம்
சுமக்கும் பாக்கியம்
பெற்றேன்.......


கரகம் தரையிறங்க
தம்ம்பூலத் தட்டில்
திருநீரிருக்க என்
கைதனில் வழங்கலானேன்
திருநீர்........

நான் சன்னதி
திரும்பும் நேரம்
ஒரு கை
சோதித்த திருநீர்
அவள் கைஎன்றுனர்ந்தேன்

கை குழந்தையுடன்
அவள்.............
காவல் தெய்வமாக
நான் இன்றும்
காதலை மறந்து...........

11 கருத்துகள்:

வினோ சொன்னது…

அடடா...

Dhanalakshmi சொன்னது…

ஏன் இந்த சோகம் தோழரே...

மறதி என்பது மனிதன் கொடுத்த வரம்...

Dhanalakshmi சொன்னது…

அழகு...

ஹேமா சொன்னது…

வரிகள் அற்புதமாக் கவிதையை அழகுபடுத்தியிருக்கிறது.

vanathy சொன்னது…

super. well written.

DREAMER சொன்னது…

நண்பரே,
வலியுடன் ஒரு கவிதை! அருமை!

-
DREAMER

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice

எஸ்.கே சொன்னது…

மிக நன்றாக உள்ளது!

என்னது நானு யாரா? சொன்னது…

பிரிவு ஆற்றாமையைப் பற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். கவிதை எளிமை + அருமை. என் அழைப்பை ஏற்று என் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி நண்பா!

என்னது நானு யாரா? சொன்னது…

//என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்//

உங்களின் வார்த்தையில் காந்திய சிந்தனைகள் மிளிர்கின்றது. அட அட என்ன அருமையாக சொல்லிட்டீங்க நண்பா!

சரி! ஏன் தமிழ்மணத்திலும், இன்டிலியிலும் பதிவுகளை இணைக்காமல் இருக்கிறீர்கள். ஓட்டுப் போடுவோம் இல்லையா? நல்ல விஷயங்களை தெரியபடுத்தினால் தானே, எல்லோருக்கும் பயன்!

பெயரில்லா சொன்னது…

Intriguing post… I’ve actually really been looking into the blog website away for some time after so i truly much like what we should experience achieved for it

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி